அண்மைய தகவல்கள்

சிரமதானம் 2

இன்று ஊறணியில் சிறப்பான முறையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.காலை 8.00 மணிக்கு ஆரம்பமான சிரமதானம் பிற்பகல் 6.00 மணி வரை இடம் பெற்றது. இன்றைய சிரமதானத்தில் பயன்படுத்தப்பட்ட பைக்கோ இயந்திரத்தின் செலவான 25 ஆயிரம் ரூபாவை லண்டனிலுள்ள இன்பன் -ஆனந்தி குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கினர். மற்றும் இன்றைய மதிய உணவிற்கான செலவை மிக்கேல்பிள்ளை வாசமலர் அவர்கள் உவந்தளித்தார். இப்பெருந்தகைகளுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். …

Read More »

Super Singers Night 2018

இந்தியாவிலிருந்து சூப்பர் Singer புகழ் ராஜகணபதியுடன் இந்தியாவில் அடையார்  இசைக்கல்லூரியில் தனது டிப்ளோமா கல்வியை கற்றுவரும் மேரி மடோனா,          ஈழத்து சௌந்தரராஜன் என்று மக்கள் மனதில் என்றும் இடம்பிடித்திருக்கும் N.ரகுநாதன் மற்றும் லண்டன் மண்ணில் வாழும் கலைஞர்கள் சிறீபதி, பாரதி , செல்லக்குழந்தைகள் தேனுகா, மாதுளானி இணைந்து சிறப்பித்த Super Singers Night 2018 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நேற்று 17.03.2018 நடைபெற்றது. மண்டபம் …

Read More »

ஊறணிக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமனம்.

ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அண்மையில் மீளக்குடியமர்ந்த பகுதியான வலி வடக்கு, காங்கேசந்துறை ஊறணியில் இருக்கும் ஒரே பாடசாலையான மேற்படி கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையினால் அவ்வூர் மக்கள் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் அக்கறை எடுத்து இப்பாடசாலைக்கு கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இரண்டு ஆசிரியர்களை நியமித்துள்ளார். இதனால் …

Read More »

சேகரம் வீதி

புதுப்பொலிவுடன் சேகரம் வீதி. அருகில் இருப்பது கோவில் மதில்,  இதை கட்டுவதற்கு மரியாம்பிள்ளை கிறிஸ்டி அருள் ஞானம் அவர்கள் தனது  அறக்கட்டளையினூடாக 90% மான நிதியை வழங்கியிருந்தார்  

Read More »

ஆலய நிர்வாகக் கூட்டம்

ஊறணியின் அபிவிருத்தியைப் பொறுத்த மட்டில் UDO தொடர்ந்து இயக்கப்பட வேண்டுமென்பது தாயகம் வாழ் மக்களின் விருப்பமாகும். இன்று அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற ஆலய நிர்வாகக் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது. தாயகம் வாழ் மக்கள் தமது சந்தாவை ஆலயத்திற்கு செலுத்துவதைப் போலவே UDO அறவிடும் உறுப்புரிமைப் பணத்தில் 1200 ரூபாவை ஆலயத்திற்கு செலுத்துவதன் மூலமாக ஊரில் தாயக உறவுகள் அனுபவிக்கும் சம அளவு உரிமையை UD0 உறுப்பினர்களும் அனுபவிக்க உரித்துடையவர் …

Read More »

2 நிரந்தர ஆசிரியைகள்

எமது ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 2 நிரந்தர ஆசிரியைகள் இன்று பிற்பகல் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். 7 வருடங்கள் ஒரே பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இந்த 2 ஆசிரியர்களும் இடம் மாற்றப்பட்டு எமது பாடசாலைக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். பன்னாலை, மற்றும் மல்லாகத்தை சொந்த இடமாகக் கொண்ட ஆசிரியைகளே இவர்களாவர். 55 மற்றும் 53 வயது நிரம்பிய அனுபவசாலிகள். கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியையும் இந்து சமயத்தைச் …

Read More »

திருப்பலி

கடந்த 25 ஆம் திகதிய பங்குத்தந்தையின் அறிவித்தலுக்கமைய நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி நடைபெறும் என அறியத்தருகின்றோம். மாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய்க்கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிற்றுக்கிழமைகளும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

சிரமதானம்

இன்று ஆலயம் நிறைந்த உறவுகள் கூடி உற்சாகமாக சிரமதானப் பணிகள் ஊறணியில் நடை பெற்றன.இன்றைய சிரமதான வேலைகளுக்காய் பயன் படுத்தப்பட்ட JCB – பைக் கோவிற்கான பணம் 25000 ஐ அன்பளிப்பாக வழங்கிய ஜெறாட் – சரோஜினி குடும்பத்தினருக்கும் இன்றைய மதிய போசனத்திற்குரிய செலவான 5000 ரூபாவை அன்பளிப்புச் செய்த புஸ்பராஜா குடும்பத்தினருக்கும் மற்றும் சிரமதானப் பணியில் பங்கேற்று தம் பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் அருட்தந்தை சார்பிலும் ஆலய நிர்வாகத்தின் …

Read More »

வீட்டுக்கு வீடு திட்டம் முழு வீச்சில் முன்னெடுப்பு

ஊறணியில் முன்னெடுக்கவுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிற்கும் முத்தாய்ப்பாய் திகழும் வீட்டுக்கு வீடு என்ற அபிவிருத்தித் திட்டத்தை முன்னுரிமைப்படுத்தி எமது முழுப் பலத்தையும் பிரயோகித்து அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை ஊறணியில் பெறுவதற்கு எமது பங்குத்தந்தை தேவராஜன் அடிகளாரின் தலைமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை நடந்த முக்கிய கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி வீட்டுத்திட்டத்திற்குப் பதிந்த குடும்பத்தினரின் விபரங்கள் …

Read More »

வரலாறு

ஊறணி கனிஸ்ட வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை பிரதேசத்தில் ஊறணி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலையானது ஊறணி கிராமத்தில் ஓர் பாடசாலை இல்லாத காரணத்தினால் அருள்திரு ஆண்டகை. ஜே.எமிலியானுப்பிள்ளை அவர்கள் மனமுவந்து கொடுத்த அந்தோனியார் ஆலயத்துக்கு சொந்தமான 4 பரப்பு காணியில் அருள்திரு. லியோ துரைசிங்கம் அவர்களால் அத்திவாரமிடப்பட்டு இக் கிராமத்து மக்களின் உதவியோடு ஆரம்பிக்கப்பட்டதாகும். இப் பாடசாலை 02.01.19இல் முன்னாள் பிரதம கல்வியதிகாரியாக இருந்த எம்.குணரத்தினம், முன்னாள் …

Read More »