Home / அருள்தாஸ் / அன்னையர் தினம் (2)

அன்னையர் தினம் (2)

அம்மா

தன்னுள்ளே

உயிர் வளர்த்து

தாங்கொணா

நோய்க் குணங்கள்

சகித்து

தன்சுவை துறந்து

சேய்காக்கும்

ஜீவனமே

வாழ்வாய்க் கொண்டு

நாட்கள் நகர

 

முட்டிய வயிறு

மூச்சடக்க

எட்டி நடந்து

ஓர் நாள்

குத்தும் வயிறு

வெடிக்குமா

உயிர்துறக்குமா – என்று

அஞ்சி

ஆவி நடுங்கையிலே

 

கொஞ்சும் உயிர்பூர்த்து – மருத்துவர்

நெஞ்சில் சாய்க்கையிலே

வலி

பஞ்சு பஞ்சாய்

பறந்தோடும்

பாரில் வாழ்வினிக்கும்50year-3

 

பால் முகம்

பரிசளித்த

பாசமிகு

அம்மா வரம்

ஆயுளிற்கும்

தீரா சுகம்

About admin

Check Also

என் மாமனே

ஏமாற்றி விட்டாயே மாமா முப்பது ஆண்டு தவமிருந்து முள்வேலி அறுந்தது எனமகிழ்ந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *