Home / 04/11/2016 பின்பான ஊறணி / வீட்டுக்கு வீடு திட்டம் முழு வீச்சில் முன்னெடுப்பு

வீட்டுக்கு வீடு திட்டம் முழு வீச்சில் முன்னெடுப்பு

ஊறணியில் முன்னெடுக்கவுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிற்கும் முத்தாய்ப்பாய் திகழும் வீட்டுக்கு வீடு என்ற அபிவிருத்தித் திட்டத்தை முன்னுரிமைப்படுத்தி எமது முழுப் பலத்தையும் பிரயோகித்து அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை ஊறணியில் பெறுவதற்கு எமது பங்குத்தந்தை தேவராஜன் அடிகளாரின் தலைமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை நடந்த முக்கிய கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி வீட்டுத்திட்டத்திற்குப் பதிந்த குடும்பத்தினரின் விபரங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் எதிர்வரும் புதன்கிழமை கையளிக்கப்பட்டு வீடுகள் கோரப்படவுள்ளன. எனவே இது வரை பதிவு செய்யாத குடும்பங்கள் விரைவாக தமது விபரங்களை யோகராசாண்ணாவிடம் வழங்கவும். அரச வீடு பெற்றோர், அரச உத்தியோகத்தர், தமது பணத்தில் வீடு கட்டியோர், ஊறணியில் காணி இல்லாதோர், தனி நபர், என பாகுபாடின்றி யாவருமே இவ் வீட்டுத்திட்டத்திற்காக பதிவு செய்யலாம்.
உறவுகளே, விரைவாகச் செயற்படுவோம். ஊறணியில் அனைவருக்கும் வீடுகள் பெற ஏற்றத்தாழ்வுகள் பாராது ஒன்றிணைந்து உழைப்போம்.

About ratna

Check Also

காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பம்

ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *