நேற்றைய தினம் – திங்கட்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட நிகழ்வில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட எமது ஊறணி கடற்றொழிலாளர்கள் 10 பேர்களுக்கு 5 படகுகள்,5 இயந்திரங்கள் மற்றும் இவைகளுக்குரிய மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளன.
தெல்லிப்பளை பிரதேச செயலக அனுசரணையின் கீழ் ILo நிறுவனத்தினர் இவ்வுபகரணங்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்கபுரத்து பயனாளிகளுக்கும் 2 படகுகளும் 2 இயந்திரங்களும் இவைகளுக்குரிய வலை உபகரணங்களும் இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன.
மேலும் 5 படகுகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட்ட உபகரணங்கள் IL0 நிறுவனத்தினரிடம் கையிருப்பில் இருப்பதாகவும் ஊறணி க.தொ.கூ. சங்கத்தினர் விரைந்து செயற்பட்டு தகுந்த பயனாளிகளை தெரிவு செய்யுமிடத்து இவைகளையும் தாம் வழங்குவோமென ILo நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.