உறவுகளே, எதிர்வரும் 15 ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு ஊறணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஊறணியில் நடைபெறுமென அதன் செயலாளர் கஜன் அறிவித்துள்ளார். இக் கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெறும் காரணத்தாலும், மீன்பிடிப் பரிசோதகர் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் காரணங்களாலும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.