சிரமதானம் 2

இன்று ஊறணியில் சிறப்பான முறையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.காலை 8.00 மணிக்கு ஆரம்பமான சிரமதானம் பிற்பகல் 6.00 மணி வரை இடம் பெற்றது.
இன்றைய சிரமதானத்தில் பயன்படுத்தப்பட்ட பைக்கோ இயந்திரத்தின் செலவான 25 ஆயிரம் ரூபாவை லண்டனிலுள்ள இன்பன் -ஆனந்தி குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கினர். மற்றும் இன்றைய மதிய உணவிற்கான செலவை மிக்கேல்பிள்ளை வாசமலர் அவர்கள் உவந்தளித்தார். இப்பெருந்தகைகளுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட எமது அருட்தந்தை அவர்கள்- எதிர்வரும் பெரிய வியாழன், பெரிய வெள்ளி, திருவிழிப்பு சனி ஆகிய தினங்களில் ஊறணியில் திருப்பலி இடம் பெறுமென அறிவித்தார். நேர விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
எதிர்வரும் 25 ஆம் திகதி குருத்தோலை ஞாயிற்றுத் திருப்பலி காலை 9.00 மணிக்கு சிலுவைப்பாதையுடன் ஆரம்பித்து நடைபெறும் என்பது யாவரும் அறிந்ததே.
எமது முன்னைய கோரிக்கைக்கு அமைவாக சாந்தா டானியேல் அவர்கள் சிவப்பு நிற பூசை உடைக்காக 20 ஆயிரம் ரூபாவை உடனடியாகவே அனுப்பி வைத்துள்ளார். இப்பெரியாருக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் அன்போடு தெரிவித்து நிற்கின்றோம்.

About ratna

Leave a Reply

Your email address will not be published.