வலி வடக்கு காங்கேசந்துறை ஊறணியில் இடித்தழிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலய வளவில் தற்காலிக
ஆலயத்திற்கான அடிக்க
ல் நாட்டும் வைபவம் இன்று 14.01.2017 சனிக்கிழமை இடம்பெற்றது. முன்னாள் பங்குத்தந்தை அருட்திரு தேவராஜன் அடிகளாரும், ஊறணி மைந்தன் அருட் திரு அன்ரனி பாலா அடிகளாரும் இணைந்து அடிக்கல் இட்டு ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு சுகிர்தன், தையிட்டி வடக்கு கிராம சேவையாளர் உட்பட பல எண்ணிக்கையில் பங்கு மக்களும் கலந்து கொண்ட்னர்.
இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய அருட்திரு தேவராஐன் அடிகளார் – மண்ணாலும் சீமெந்தாலும் கட்டிய பிரமாண்டமான ஆலயத்தைத் தான் இடித்து அழித்தார்களே தவிர இங்கு வாழ்ந்த இச் சமுதாயத்தை அவர்களால் இடித்தழிக்க முடியவில்லை. இதோ அச்சமுதாயம் மீண்டெழுந்து இயேசுவை மையப் படுத்தி மீண்டுமோர் ஆலயத்தைக் கட்டியெழுப்பத் தயாராகிவிட்டார்கள். எனத் தெரிவித்தார்.