ஊறணி கனிஸ்ட வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை பிரதேசத்தில் ஊறணி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலையானது ஊறணி கிராமத்தில் ஓர் பாடசாலை இல்லாத காரணத்தினால் அருள்திரு ஆண்டகை. ஜே.எமிலியானுப்பிள்ளை அவர்கள் மனமுவந்து கொடுத்த அந்தோனியார் ஆலயத்துக்கு சொந்தமான 4 பரப்பு காணியில் அருள்திரு. லியோ துரைசிங்கம் அவர்களால் அத்திவாரமிடப்பட்டு இக் கிராமத்து மக்களின் உதவியோடு ஆரம்பிக்கப்பட்டதாகும்.
இப் பாடசாலை 02.01.19இல் முன்னாள் பிரதம கல்வியதிகாரியாக இருந்த எம்.குணரத்தினம், முன்னாள் வட்டாரக் கல்வியதிகாரியாகவிருந்த கே.சோமசுந்தரம் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. அச் சமயத்தில் 64 மாணவர்கள் புதிதாக பாடசாலையில் சேர்க்கப்பட்டனர். பாடசாலையின் பதில் அதிபராக ஏ.எம்.யோசப் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/vi/register?ref=RQUR4BEO