எமது ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டடத்திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது(05.04.2018)
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களால் நாளைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இத் திறப்பு விழா பற்றி நேற்றைய தினமே தீடீரென்று பாடசாலை அதிபருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அவசர அவசரமாக திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.
உறவுகளே, பாடசாலையின் பழைய மாணவர்களே மேற்படி கட்டடத் திறப்பு விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகிறீர்கள்.
