சித்தையா

ஊரும் உறவும் உறங்கிடுமோ
உங்கள் நினைவு மறந்து…..

ஊர் திரும்புகையில் ஊர்தான் நம்மை பேசாதோ நீர் இல்லா வெறுமை கண்டு,
காலத்தின் பொக்கிஷம் அல்லவா நீங்கள் எமக்கெல்லாம்,
இத்தனை அவசரமாய் மரணமுங்களை நேசித்ததுதான் ஏனோ????

ஊர் கூடி தேரிழுக்க கனவு கண்டு
இன்று ஊர் வலமாய்ப் போறிரோ
ஊரிலே நிரந்தரமாய் உறங்கிட ஆசை கொண்டு,
காலங்கள் பல கடந்தும் கனவுகளை சேர்த்து வைத்து,
ஊருக்காய் அன்றும் -இன்றும் உழைத்து விட்டு,
ஊரின் அருமை பெருமை பேசி ஊர் செல்லும் ஆசையும்,
பற்றும் ஊட்டி விட்டு நம்மை விட்டு தொலை தூரம் சென்றதுமேனோ???

கடலும் கரையும் உம் காலடி பட நாதியற்று போயிற்று,
வேட்டியும் வெண்ணிற ஆடையுமாய் நித்தமும் ஆண்டவன் நாமம் பேசியே வலம் வருவீர்,
வெடுக்கன பேசியே மிடுக்காய் நீர் நம்முடன் வாழ்ந்த நாட்கள் தான் நெஞ்சை விட்டகலுமோ ???அகலுமோ???
சிரிப்பு மட்டும் குறையாய்,சிந்தனையில் சிறைப் பட்டவர் போல் கடந்து செல்வீர் சலனமின்றி,
நிரந்தரமாய் விடைபெறுவதால்த்தான் அன்றுமட்டும் என்னிடம் ஒரு வார்த்தை பேசி சென்றிரோ ….,

அது இன்றும் ஒலிக்கையில் ….
நீங்கள் மட்டும் படைத்தவன் பாசமாய் அழைத்திட பாரினில் எம்மை விட்டு சென்றிரோ,

அமைதியில் இளைப்பாறுங்கள,
உங்களுக்காய் பிரார்த்திக்கின்றோம்

சித்தையா. நிலோ தார்சீசியஸ்

About admin

Leave a Reply

Your email address will not be published.