ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், மணற்காடு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, அருள்நாதன் சந்தியோ(உமா) அவர்கள்
இன்று இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணக வாழ்வை நோக்கி பயணித்துள்ளார். இவர் மேரி பற்றிமா ( புஸ்பராணி) இன் அன்பு கணவரும் ஜெகன், (காலம் சென்ற ரூபன்), நிசா, றொசான், நதியா, சிந்து ஆகியோரின் பாசம்மிகு தந்தையும், (காலம் சென்ற மேரி திரேசா), மேரி யோசப்பின்(ஊறணி அக்கா), அசோக் றெனிதாஸ் (றெனி), அன்ரன் ஜெயநாதன்(பெரியதம்பி), மேரி ஞானமலர், மேரிகெலன் வசந்தராணி (வசந்தா), மேரி இமல்டா(பேபி) ஆகியோரின் பாசம்மிகு சகோதரனும் ஆவார்.
இவரது ஆன்மா இறை அமைதியில் இளைப்பாற இறைவனிடம்
வேண்டி நிற்பதுடன்.
இவரது பிரிவால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்..
“நித்திய இளைப்பாறுதலை இவரிற்கு அளித்தருளும் ஆண்டவரே முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிரக்கடவதாக ஆமேன் “.
தொடர்புகளுக்கு..
றெனி(சகோதரன்) இலண்டன்:-00447427022270
ஜெகன் (மகன்) இலங்கை:-0094773521186
சிந்து (மகள்)இலங்கை:-0094763507761
இறுதி அஞ்சலி தொடர்பானவைகள் பின்னர் அறிய தருகின்றேன் .. தகவல் அசோக் றெனிதாஸ் (றெனி) சகோதரன்
