26 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வந்த வலி வடக்கு காங்கேசந்துறை ஊறணியின் நான்கு
படகுத்துறைகள் இன்று 04.02. 2017(சனிக்கிழமை) பி.ப 4.00 மணிக்கு இராணுவத்தினரால் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் இன்று படகுத்துறை களைப் பார்வையிடவோ பயன்படுத்தவோ அனுமதிக்கப்படவில்லை. நாளை காலை தொடக்கம் படகுத்துறை களைப் பயன் படுத்தி ஊறணி மக்கள் கடற்றொழில் புரியலாம் என இராணுவம் தெரிவித்துள்ளது.