பங்குக் குருமனைக்கான (அறை வீட்டிற்கான) கட்டட வேலைகள் எதிர்வரும் 03.04.2018 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பம்.
இன்று – (சனிக்கிழமை) காலை ஊறணிக்கு ,இராணுவம் மற்றும் கட்டட தொழினுட்ப உத்தியோகத்தர்களுடன் வருகை தந்த எமது யாழ் ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள்,அறை வீட்டுக்குரிய இடத்தைப் பார்வையிட்டு, பொருத்தமான இடத்தை (பழைய அறைவீடு இருந்த இடம் ) தெரிவு செய்து அத்திவாரம் போடும் மேற்படி நாளையும் அறிவித்தார்.
உறவுகளே, “அ” சுழி போட்டு உத்தியோகபூர்வ முதல் நிகழ்வு ஆரம்பம்.
முக்கிய நிகழ்வு இது என்பதால்,எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அனைவரும் அணிதிரள்வோம்.
அனைத்து ஊறணி பங்கு மக்களையும் இந்நிகழ்வுக்கு வருகை தருமாறு எமது பங்குத்தந்தை- எம் பேரன்பிற்குரிய அருட்திரு தேவராஜன் அடிகளார் வருக வருகவென அன்போடு அழைக்கின்றார்.
