தற்போது இலங்கையிலும் பதிவுசெய்யப்பட்ட சாம்மரி தாயிசா அறக்கட்டளை மையமானது வலி வடக்கில் தனது முதலாவது திட்டமான “பசுமைத்திட்டம் 2018” எனும் திட்டத்தை முன் எடுத்துவருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் காணிகளை பயிர்செய்கைக்கு பயன்படுத்துவதன் மூலம் அந்த நிலங்களில் பசுமையை ஏற்படுத்துவதோடு உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தநிலங்களில் தனியாரோடு சாம்மரி தாயிசா அறக்கட்டளை மையமும் முதலீடு செய்கிறது. இந்தமுதலீட்டில் கிடைக்கும் வருமானத்தில் மேலும் பலரை வேலைக்கு அமர்த்தி பல காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளது.ஊருக்கும் சூழலுக்கும் பொருத்தமான இந்த திட்டத்தை தனது கன்னி முயற்சியாக Sam Mari Thaisa Farm, GREEN PROJECT 2018 என்னும் பெயர்பலகையை வெளியிட்டு, உத்தியோகபூர்வமாக இந்த திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது
