ஊறணி உறவுகளே, வட மாகாணத்தில் இந்த நவம்பர் மாதத்தினை ,புதிய மரங்கள் நடுகை செய்து ஊர்களை பசுமையாக்கும் ஒரு திட்டத்திற்காக பிரகடனப்படுத்தி யிருப்பதாகவும் அந்தத்திட்டத்தின் அடிப்படையில் நேற்றய தினம் (13.11.2018) எம் ஊறணியில் பல குருவானவர்கள் (50) ஐம்பது வரையான வளர்ந்து பலன் தரக்கூடிய மரங்களுடன் வருகை தந்து ,எம் கோவில் வளவில் ஒரு மரம் நாட்டு விழாவையே நடத்தியிருப்பதாக ,நான் அறிந்த தகவலை எல்லோரும் அறிய பகிர்ந்து கொள்கிறேன். இந்த விடயத்தில் ஊறணியை தெரிவு செய்து இதனை நடாத்தி வைத்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் மிகவும் நன்றிகள். இந்த நிகழ்வின் எனக்கு கிடைத்த ஒரு சில படங்கள் உங்களுக்காக பகிர்கின்றேன். ரவி சுவிட்ஸ்