அமெரிக்கன் மிசன் மகாவித்தியாலயத்திலிருந்து மயிலிட்டி கஸாஸ்பத்திரி வரையான தையிட்டி வடக்கு J/249, மயிலிட்டித்துறை J/251 கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 28.81 ஏக்கர் கரையோரக் குடியிருப்புக்கள் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப வைபவங்களைத் தொடர்ந்து உடனடியாகவே ஊறணிப்பிரதேச இராணுவத் தளபதி யை அழைத்து வந்து ஊறணி அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக கம்பிக்கட்டுக்கள் பிரிக்கப்பட்டு குடியிருப்புக்கள் திறந்து விடப்பட்டன. இதைத் தொடர்ந்து கரையோர வேலிகளும் இராணுவத்தால் தற்சமயம் அகற்றப்பட்டு வருகின்றன.