Home / 04/11/2016 பின்பான ஊறணி / 30.08.2020 அருட்பணி சபைக் கூட்டம்

30.08.2020 அருட்பணி சபைக் கூட்டம்

இன்றைய அருட்பணி சபைக் கூட்டத்தில் ஆலயக் கட்டுமானம், சேமக் காலை, ஆலயம் முன்பாக அந்தோனியார் சொருபம் ஸ்தாபித்தல் , ஊத்தலடியில் மாதா ஹெவி கட்டுதல் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டது.

புதிய ஆலயம் கட்டுமானம் தொடர்பாக –
தற்போது நடுக் கோயில் மற்றும் இருபக்க விறாந்தைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலதிகமாக முகப்பு மற்றும் போட்டிக்கோவின் வரைபடங்கள் – அளவுத் திட்டங்கள் என்பனவற்றை வரையறை செய்து ஒப்பந்தக்காரரிடம் ஒஸ்ரின் மூலமாக வழங்கப்படல் வேண்டும் என்றும் முகப்பு மற்றும் போட்டிக்கோவின் படங்களை (முன்னர் காட்டிய) ஒரு வார இடைவெளியில் அனைவர் பார்வைக்கும் – ஊறணி வைபரில் பதிவிடல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சேமக்காலை –
ஊரின் சேமக்காலையை புதுப்பொலிவுடன் புனரமைத்தல் தொடர்பாக ஏற்கனவே – udo இயங்கும் போது லண்டன் வாழ் ஊறணி அமைப்பினரின் ஆலோசனைப்படி செய்யலாமென்றும் மீளக்குடியமர்வுக்கு முன்னர் இறந்தவர்களின் படங்களைப் பொறிப்பதற்காக ஒரு இறந்தவரின் படம் பொறிப்பதற்காக 10000 ரூபாய் வாங்கி புனரமைக்க முடியுமெனவும் இதை லண்டன் நிர்வாகம் பொறுப்பெடுக்குமாக இருப்பின் ஊரின் அருட்பணி சபையினரின் உதவியுடன் முன்னெடுக்கலாமென்றும் இக் கூட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்டது. ஆயினும் தற்போது சேமக் காலையில் கட்டியிருக்கும் கல்லறைகளை உடைக்க முடியாதென்றும் அருட்பணி தெரிவிக்கிறது.
மேலும் 4 லைனில் இனி உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்றும் இனி கல்லறை கட்டுவதற்கு அனுமதி இல்லையென்றும் சிறிய பெயர் பதிக்கப்பட்ட நடுகைக் கல்லுடன் கூடிய சிலுவையே நாட்டப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
சேமக் காலைக்கு பொறுப்பாக இருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். திரு.தேவதாஸ் ரஞ்சன், மற்றும் திரு.அ.இராசநாயகம் (ராசு) இவர்கள் இருவரையும் இனிமேல் தொடர்பு கொண்டு அடக்கம் தொடர்பான இடங்களையும் விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும். எனினும் புனரமைப்புத் தொடர்பாக அருட்பணி சபையைத் தொடர்பு கொள்க. இது தொடர்பான கருத்துக்களை லண்டன் வாழ் ஊறணி அமைப்பிடமிருந்து அருட்பணி சபை எதிர்பார்க்கின்றது.

ஆலயத்தின் முன்பாக வீதியோரத்தில் 6 அடி அந்தோனியார் சொருபம் ஸ்தாபித்தல் –
ஏற்கனவே நாவாந்துறை அன்பர் ஒருவரால் ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 6 அடி அந்தோனியார் சொருபத்தை வீதியோரத்தில் ஆலய வளவில் ஸ்தாபிக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு நிதி அன்பளிப்புச் செய்பவர்கள் புதிய ஆலயத்தின் நிதி அன்பளிப்புக்கு மேலதிகமாக இதற்கும் அன்பளிப்புச் செய்யலாம்.

ஊத்தலடி மாதா ஹெவி –
ஊத்தலடியில் மாதா ஹெவி கட்டுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. ஹெவி கட்ட முன் வருபவர்கள் அதற்கான வரைபடத்தைத் தயாரித்து அருட்பணி சபையினரைத் தொடர்பு கொள்க.


நன்றி
அருட்பணி சபை
புனித அந்தோனியார் ஆலயம்
ஊறணி.

——————————————————————————–

Henry 30.08.2020 viber
ஊறணி உறவுகளுக்கு வணக்கம் !
சேமக்காலையும் அதில் அமைக்கப்படும் கல்லறையைப்பற்றியும் செய்திகளும் எடுக்கப்பட தீர்வுகளும் பார்க்கும் போது எனது கருத்தை சொல்ல வேண்டும் போல இருந்ததால் திரும்பவும் இந்த தளத்தில் நுழைகிறேன் மன்னிக்கவும் ,

இங்கு எடுக்கப்பட்ட முடிவானது இனி வரும்காலத்தில் இங்கு அடக்கம் செய்யும் , செய்பவர்களுக்கே பொருத்தமானது , இன்றில் இருந்து நடைமுறை படுத்தமுடியும் எங்கள் நடைமுறை பிடிக்காதவர்கள் அவர்கள் விரும்பினால் வேறு எங்காவது அவர்களுக்கு விரும்பிய இடத்தில் அவர்களுடைய உறவுகளை அடக்கம் செய்யலாம் இதுவே நியாயமானது
நிற்க ஏற்கனவே இங்கு அடக்கம் செய்யப்பட்ட திரு எட்வேட் அவர்களுக்கு கல்லறை கட்ட அனுமதிப்பதே நியாயமானதும் தர்மமானதும் ஊரின் ஒற்றுமையை வளர்ப்பதாகவும் அமையும் ஏனெனில் திரு எட்வேட் அவர்களை இங்கு அடக்கம் செய்யும் பொழுது அவரின் உறவுகளுக்கு எங்களின் நிபந்தனைகளை சமர்ப்பிக்க தவறியதால் அவரின் உறவுகளுக்கு அவர் நினைவாக ( மற்றைய உறவுகளுக்கு என்ன சுதந்திரந்தை நாங்கள் கொடுத்துள்ளோமோ அதைப்போல ) கல்லறை கட்ட அனுமதிக்க வேண்டிய கடமை நமக்குள்ளதாகவே நான் கருதுகிறேன்
நன்றி
இது தனிப்பட்ட எனது கருத்து

தி.ரு .கென்றி; ஏனைய ஊறணி உறவுகளுக்குமாக;

——————————————————————————————————

31.08.2020

கல்லறை கட்டுவதில்லை என்ற முடிவு நேற்றுத்தான் எடுக்கப்பட்டதல்ல .
இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தான் எட்வேட் மாமாவிற்கு முன்அடக்கம் செய்யப்பட்ட திரு. டேவிட் அவர்களின் தாயாருக்கும் நினைவுக்கல்லே அமைக்கப்பட்டுள்ளது .
முறையான தீர்மானத்திற்கு முன்னராக கட்டப்பட்ட 4 கல்லறைகளே உள்ளன .ஏனைய 3 உம் நினைவுக்கற்களே.
இதற்கான பிரதான காரணம் சேமக்காலைக்கான காணி சிறியதாகும் என்பதாகும் .

குறிப்பு:

திரு. டேவிட் அவர்கள் கல்லறை கட்ட அனுமதி கேட்டு அனுமதி
வழங்கப்படவில்லை .
இதைவிட வள்ளுவர் புரத்தவர்கள் 4 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
விஜயகுமார் _

சேமக்காலை

புதிய ஆலயம் கட்டுமானம்

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang