எனது பேரன்மார் உட்பட பெரியவர்கள் கூறிய கதைகளையும் லீனப்பு மாமா (அன்ரனின் தகப்பன்-danmark ) மற்றும் ராசாமாமா சொன்னவற்றையும் வைத்து இந்தகுறிப்பை பதிவு செய்துள்ளேன் செசீலி ஆச்சி செபமாலை அம்மாமாமி இருந்த போது கேட்டிருந்தால் இன்னும் வியரமாக சொல்லியிருப்பார்கள் அதைதவறவிட்டோம் என்று நினைக்கிறேன.
முன்னைய காலத்தில் தரைவழி பாதை கஷ்டமானது மாட்டுவண்டிலில்தான் பிராயாணம். பெரிய தளபாடங்கள் கடல் வழியாக கொண்டுவருவார்கள், செம்மண் சிவரால் ஆன ஓலை வீடுகள் தான். பெரிய கட்டிடம் கட்டுவது சுண்ணாம்பு சூழைவைத்து கட்டுவார்கள், வருடங்கள் செல்லும், சீமெந்து கல் அரிந்து கட்டும் வழக்கம் அப்போது வரவில்லை.
பெரியவர்கள் சிறுவர்களுக்கு கடற்கரையில் நிலவு காலத்தில் கதை சொல்வார்கள். அந்தோனியாரின் சப்பாத்து கால் சத்தம் இரவில் கேட்டதாகவும் பரிகலங்கள் வந்து. இறங்குவதாக கதை கட்டிவிட்டு இந்தியாவில் இருந்துதோணிகளில் ஆட்களை கொண்டுவந்து மலையகத்திற்கு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு கொண்டு போனார்கள் என்று. தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்த இவற்றை நம்பமாட்டார்கள்
ஊறணி கிராமம்
காங்கேசன்துறைபுகையிரதநிலையத்தை அண்டிய பகுதியில் தான் எமது முன்னோர் வாழ்ந்துவந்ததாகவும் புகையிரம் வந்தால் தண்டவாளத்தை விட்டுவிலகி விட்டு வந்தால் வீட்டிற்குள் வந்துவிடும் என்று பயமுறுத்தல்களை விடுத்தே மக்களை வெளியேறவைத்தார்கள்
நாட்டைசுரண்ட வந்த வெளி நாட்டவர்கள் பிரித்தாழம் தந்திரம் கொண்டவர்கள் மக்களை பற்றிசிக்திக்காமல் மேட்டுகுடியினர் மூலம் நிர்வாகம் நடத்தினார்கள். மேட்டு குடியினர் சொன்னதை மக்கள் நம்பினார்கள் இப்படியாக குடி பெயர்வு நடந்திருக்கலாம் முன்னோர் நீதி நியாயத்திற்கு கட்டுபட்டவர்களாக இருந்தார்கள் அவர்கள் சொன்னதை நிராகரிக்கவும் முடியாது சில குடும்பங்கள் கீரிமலைப்பக்கமாக குடி பெயர்ந்தார்களாம்.
R.C பாடசாலை வைரவகோவில் உட்பட பல குடும்ப பின்னணிகளை கொண்ட வர்கள் எமது ஊறணி பகுதிக்கு வந்தார்கள் ஆதரவற்ற மக்களை வெள்ளைகார குருவானவர் ஆதரித்து உதவிசெய்தாராம் ஒரு பகுதிகோவில் இருந்த இடத்திற்கு நேரே கடற்கரை பக்கமாகவும் இன்னொரு பகுதி ஓடக்கரை பழைய சந்தை பக்கமாகவும் வடலி பனை கூடல் இருந்த இடத்தில் (இந்தபகுதிதான் வட்டல் காடாக மாறியது) எங்கள் முன்னோர்கள் 4.K.S புகையிரத நிலைய பகுதியில் இருந்ததிற்கு ஆதாரம் R.c பாடசாலை இருந்த காணியை மேற்றாசனத்திற்கு எங்கள் முன்னோர்கள் கொடுத்தார்கள். இடம் பெயர்ந்து ஊறணியில் மேற் சொன்ன பகுதிகளில் குடியமர்ந்தார்கள்.
லூர்து கெவியில் இருந்து கடற்கரை பக்கமாக (வடக்கு) இருந்து மாரி காலத்தில் இயற்கையாக பாய்ந்து ஓடி ஓடை ஏற்படும், அந்த ஒடைக்குள் படுத்திருந்தால் கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் தள்ளி செல்லும், அந்த உஊற்று நீரினால்தான் ஊறணி என்ற பெயர் உருவாகியதாம். நான் சிறுவனாக இருந்த காலத்தில் கெவியடியில் ஓடைக்குள் குளிக்கும் போது ஒடைக்குள் சிறிது தூரம் தள்ளிச் செல்லும்.
ஆரம்பத்தில் ஊறணி கிராமத்தில் றோட்டுப் பகுதியில் வீடுகள் இல்லை கடற்கரை பகுதியில்தான் இருந்ததாம் அன்ரனின் தகப்பன் லீனப்பு மாமா சொன்னவர் கடற்கரையிலிருந்து கடல் அலை அடிக்கும் இடம் 500 மீற்றன் வநமாம்
எங்கள் பப்பாவின் தாய் பிறந்த வீடு கெவிக்கு மேற்குபக்கமாக கடல் அலை அடிக்கும் இடத்தில் இருந்த கட்டிடத்தை காட்டி சொன்னார்கள். சின்னத்தம்பிமாமாவும் அவர் வயதை ஒத்தவர்களும் அந்தகட்டிடத்திற்கு மேல் நன்று சணல் நூல் முறுக்குவார்கள் அருளப்பு அண்ணன்மரம் இறக்கும் இடத்தில் அவர்களின் பழைய வீடு இருந்தது அதற்கு கிழக்குபக்கமாக மண்மட்டத்தில் அந்திவாரம் இருந்ததை சிறுவயதில் கண்டுள்ளேன்
தமிழ்மக்களுக்கு பாரம்பரியம் இருக்கிறது கோவிலை சேர்ந்த குடிகள் குடிகனை சேர்ந்த கோவில்கள் கரவலை சம்மாட்டிமார் சேர்ந்து வத்தை மங்கிகளில் மரங்கள் நளயாடங்கள் கொண்டுவந்து கோவிலையும் பெரிய சுண்ணாம்பாலான பெரியகல்வீடுகளையும் கூட்டினார்கள்
-மறைந்த ஜோசப் தேவசகாயம் – (எழுதிய காலம் 1999)










