Home / பிரான்ஸ் / பிரான்ஸ் ஒன்று கூடல்

பிரான்ஸ் ஒன்று கூடல்

இலண்டனில் நடாத்தப்பட்டதைப்போன்றதொரு ஒன்றுகூடலே கடந்த ஆனி 20ல் பாரீசிலும் நடாத்தப்பட்டது.அதற்கு முன்பு அதனை நடாத்திட முயற்ச்சிகள் மேற்கொண்டபோதிலும் அருட்திரு தேவராயன் அடிகளார் அவர்கள் வேறுபலபொதுநலப்பணிகளில் தொடர்பு கொண்டிருந்தமை காரணமாக நடாத்திடமுடியவில்லை.

இருப்பினும் பாரீசில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு நிலமைகளை விளக்கியபடி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தோம். அவர்களும் அதுபோலவே ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டுசெய்தி மாற்றத்தைப்பகிர்ந்தபடி இருந்தார்கள். சிறப்பாகத்திருவாளர்கள் குட்டி விமலதா நேசன் வின்சன் மற்றும் போன்றோரை குறிப்பிட்டுச்சொல்லலாம். எல்லோரினதும் முயற்ச்சிகளுக்கூடான இவ்வொன்றுகூடலானது மேற்குறித்தபடி ஆனி 20 இல் பாரீசில் உள்ள ஒப்புரவு அன்னையின் கோவில் மண்டபத்தில் தொடங்கியது.அதற்க்கு முன்பு அங்கு வருகைதந்தோர்கள் ஒவ்வொருவரும் ஒருவரோடொருவர் கதைப்பதும் சிரிப்பதும் இருப்பதும் உலாவருவதுமாககூடத்தைக் கலகலப்பாக்கிய நிகழ்வானது திருப்பலி முடிந்தபின் கோவில் திடலடியில் கூடிநின்று பத்தும்பலதுமாக கதைபேசி மகிழ்ந்து வீட்டிற்க்குத் திரும்பிய கடந்தகால ஊறணி வாழ்வை எமக்கு நினைவூட்டியது.அந்தப்பசுமையான நினைவுகளிலிருந்து மீண்டும் மீளாமலும் கூடலைத்தொடர்ந்தோம். பொறுப்புரை வழங்கிய திருவாளர் குட்டி அவர்கள் ஒன்றுகூடலுக்கான ஆரம்ப உரையுடன் பொதுமையாகவும்; N;வறுசெய்திகள் சிலவற்றையும் கூறிமுடித்துக்கொள்ள அடுத்துப்பேசிய அருட்திரு தேவராயன் அடிகளார் அவர்கள் ஒன்றுகூடலின் நோக்கத்தை சற்று விரிவுபடுத்திப் பேசினார்.குறிப்பாகத் தாய்மண்ணில் இடம் பெயர்ந்து வாழ்பவர்களில் உதவியற்று இடர்படுவோர் பற்றியும் கல்விகற்க முடியாத நிலையிலுள்ள சிறுவர்கள் பற்றியும் மிகப்பொருள் வசதிகுறைந்த எம் பாட்டன்மார் பாட்டிமார் பற்றியும் குறிப்பிட்டுப்பேசியது மண்டபத்தில் கூடியிருந்த பலரையும் சிந்திக்கத்தூண்டியது. அன்பும் இரக்கமும் இயற்கைக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. மனிதக்கடவுளரான நமக்கும் சொந்தமானவை என்பதே.உரையின்பால் எழுந்த சிந்தனையின் பெறுபெறாக இருக்கும். இருக்க வேண்டும். என்பதே நல்லோரின் வேணவா.நிலத்தில் வாழ்பவர்கள் போரின் சுமையைத் தமக்காக மட்டும் சுமக்காது புலத்தில் வாழும் எமக்காகவும்தான் சுமக்கிறார்கள். சுமந்துகொண்டே இருக்கிறார்கள். அந்தச்சுமைக்காக அந்தச்சுமை ஏற்படுத்திய சோர்வுக்காக அவர்களை அரவணைப்போம். அவர்களுக்கு அன்பு செய்வோம். அவர்களிடம் அமைதி வழங்குவோம்.20.06.2004

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang