சங்கத்தின் பெயரில் காணி எழுதப்பட்டது.10.06.2019
சீந்திப்பந்தல் பொதுக் காணி விற்ற பணத்திலிருந்து முக்கால் பரப்புக் காணி (இன்பராணியக்காவிடமிருந்து) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே (மரியாம்பிள்ளைச் சம்மாட்டியாரின்)வாங்கப்பட்ட முக்கால் பரப்புக் காணியுடன் சேர்த்து மொத்தம் ஒன்றரைப் பரப்புக் காணியையும் ஊறணி புனித அந்தோனியார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பெயரில் முறைப்படி பதிவு செய்யப்பட்டு சங்கத் தலைவர் திரு.குளோட் எட்வேட் மற்றும் சங்கப் பொருளாளர் திரு.கைத்தாம்பிள்ளை ஜோன்சன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விற்கப்பட்ட சீந்திப்பந்தல் பொதுக் காணி, வாங்கப்பட்ட உரிமையாளர் பெயரில் பதிவு செய்வதற்கான ஒழுங்கு தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உரிமையாளரிடமிருந்து மிகுதிக்காசு பெறப்பட்டதும் புலம் பெயர் உறவுகளின் விருப்பத்தின் பேரில் காசு வங்கியில் இடப்படும்.
ஏல விற்பனை தொடர்பானது
சீந்திப்பந்தல் பொதுக் காணி ஏல விற்பனைக்காக தாயக நிர்வாக உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட விதிமுறைகளுக்கமைய கேள்வி இடம் பெறாத காரணத்தால் முன்னைய ஏலம் இரத்து செய்யப்பட்டு மீண்டும் ஏலம் நடத்துவதாக இன்று (12.05.2019) ஊறணியில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் ஏலமானது எதிர்வரும் 19.05.2019- ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையுள்ள இரண்டு மணி நேர காலத்தில் நடத்தப்படும். இவ் இரண்டு மணி நேர காலத்தில் கேட்கப்படும் ஏலத் தொகையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏலமாகக் கருதப்படும். இவ் இரண்டு மணி நேர காலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ கேட்கப்படும் ஏலம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அன்றைய தினம் தாயக நிர்வாகிகள் ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் பிரசன்னமாகியிருப்பர். இவர்களின் மேற்பார்வையில் இத்தளத்தில் ஏலம் நடத்தப்படும்.
இவ் ஏலத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் தம்மால் இவ் வைபர் தளத்தில் பெயரிட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை (எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பாக இத்தளத்தில் தாங்கள் அறிவிக்க வேண்டும்) ஏலம் நடத்தப்படும் அந்நாளில் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையுள்ள காலத்தில் ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து நேரடியாகவும் ஏலத்தில் பங்கு கொள்ள முடியும். அல்லாதோர் இவ் வைபர் மூலமாகவும் பங்கு கொள்ளமுடியும்.
ஏனைய விதிமுறைகள் முன்னர் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு இத்தளத்தில் பதிவிட்டமை பொருந்தும்.
ஆரம்ப ஏலத் தொகை 700000 ( ஏழு இலட்சம்) இலங்கை ரூபா ஆகும்.
அன்றைய தினம் மீண்டும் வைபர் முடக்கப்படுமானால் ஏலம் பிற்போடப்படும்.
நிபந்தனைக்காக முன்னைய பதிவிலிருந்து
ஊறணியின் அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் பங்குபற்றிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீந்திப்பந்தல் காணி தொடர்பான முடிவுகள் வருமாறு :-
- அனைத்து புலம் பெயர் ஊறணி வாழ் மக்களின் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் தாயக வாழ் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் சீந்திப் பந்தல் பொதுக் காணியை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
- ஊறணியை சொந்த இடமாகக் கொண்ட நபரோ அல்லது குடும்பமோதான் இக்காணியை ஏலத்தில் எடுக்க முடியும்.
- இக்காணி ஒன்றரை பரப்புக் கொண்டது.(இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சுற்று மதிலும் மற்றும் குழாய்க்கிணறும் காணப்படுகிறது) இதன் ஆரம்ப விலை ஏழு லட்சம் ரூபாய் ( 700000 /= )
- இக்காணியை வேண்டுபவர் மீண்டும் விற்க நேர்ந்தால் ஊறணியை சொந்த ஊராகக் கொண்டவருக்கோ அல்லது தனது பிள்ளைகளுக்கோ அல்லது தன் இரத்த வழி வந்தவர்க்கோதான் மறுபடியும் விற்க முடியும் – இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆவணம் முடிக்கப்படும் …