ஒரு ஐரோப்பிய சோதனை ராக்கெட், புறப்பட்ட சற்று நேரத்திலேயே கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
நார்வேயின் ஒரு விண்வெளி நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட இந்த ஆளில்லா ஸ்பெக்ட்ரம் ராக்கெட், ஐரோப்பாவிலிருந்து ஏவப்படும் ஆர்பிடல் ராக்கெட்டின் முதல் முயற்சியாக பார்க்கப்பட்டது.
ஆர்பிடல் ராக்கெட் என்பது புவியின் சுற்றுவட்டப்பாதையில் அல்லது அதைத் தாண்டியோ செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் ராக்கெட்டாகும்.
இந்த ராக்கெட்டை உருவாக்கிய ஜெர்மன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான இசார் ஏரோஸ்பேஸ், இந்த சோதனை முன்கூட்டியே முடிவடையலாம் என முன்பே எச்சரித்திருந்தது. மேலும், தரவுகளை பதிவு செய்ய ராக்கெட்டின் 30 விநாடி பயணமே போதுமான நேரம் என்று நிறுவனம் கூறியது.
எங்கள் முதல் சோதனை ராக்கெட் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது என நிறுவனத்தின் இணை நிறுவனர் டேனியல் மெட்ஸ்லர் கூறினார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு