புலம் பெயர்ந்து பிரான்ஸ் வாழும் ஊறணி
மக்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 22.07.2012
ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு வழமையாக நடைபெறும் மண்டபத்தில் நடைபெற்றது.
அருள் தந்தை தேவராஜன் அடிகளாரால் நிறைவேற்றப்பட்ட திருப்பலியுடன் விழா ஆரம்பமானது.
இறைவார்த்தை மாற்கு அதிகாரம்10 வசனம் 47-52 வாசிக்கப்பட்டு கிறீஸ்த்துவைப் பின்பெற்ற நாம் எப்படியான பார்வை பெறவேண்டும்
என்பதற்கான மறை விளக்கமும் அருள் தந்தையினால் கொடுக்கப் பட்டது.
திருப்பலி முடிவில் அவரது மாணிக்க விழா ஆண்டை ஒட்டி நன்றி வாழ்த்துக் கவிதை வாசிக்கப் பட்டது.
மதிய உணவின் பின் வரவேற்பு நடனம்இ நாட்டியம்இ கவிதைஇ பாட்டுஇ பேச்சு நகைச்சுவைஇ பாரம்பரிய நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளும்
இடம்பெற்றன. சிறுவர் பெரியவர் இளைஞர் யுவதிகள் இடையில் போட்டி விளையாட்டுகளும் நடைபெற்று விழா இனிதே முடிந்தது
இவ் விழாவில் பங்கு பற்றிய அனைத்து ஊறணி மக்களுக்கும் இன்னும்இ எமது அழைப்பை ஏற்று விழாவில் பங்கு பற்றிய எமது கிராமம் சார்பற்ற அனைத்து நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.