விண்ணப்பம் தொடர்பில் அறிவிப்பு
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.
பரீட்சார்த்திகள் ONLINEEXAMS.GOV.LK எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெற்பேற்றை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.
இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 1,77,588 பேர் பல்கலைக்கழகத்திற்காக தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் 456 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.