சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு – யூத சமூகமே இலக்கு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல், சிட்னியில் வாழும் யூத சமூகத்தை குறிவைத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
யூதர்களின் முக்கியமான பண்டிகையான ஹனுக்கா (Hanukka) தொடங்கிய முதல் நாளிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதால், இது மத அடிப்படையிலான வெறுப்புத் தாக்குதல் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் சம்பவ இடத்தில் விரைந்து செயல்பட்டு விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. யூத சமூகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியையும், மத நல்லிணக்கத்தின் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு – யூத சமூகமே இலக்கு
https://edition.cnn.com/world/live-news/bondi-beach-gunshots-reported-12-14-25









