போப் பிரான்ஸில் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது.
போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், மார்ச் 2013-ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ எனும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு “ஈஸ்டர் வாழ்த்துக்கள்” வாழ்த்து தெரிவிக்க செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றிய ஒரு நாளுக்குப் பிறகு அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
“அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்” கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்
நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு-மூலாதாரம்,Reuters