12.10.2014 அன்று பொது நூலகம் கட்டுவது தொடர்பாக அவசரமாக கூட்டம் கூட்டப்பட்டது .அதில் இம் முறை யாழ்பாணத்திலிருந்து ஊறணி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஜோகராஜா பொருளாளர் புஷ்பராஜா ஆகியோர் கலந்து கொண்டனர.அவர்களிடம் எமது புலம் பெயர் ஊறணி மக்கள் சார்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
- புலம்பெயர்ந்த ஊறணி மக்களும் நாட்டிலுள்ள ஊறணி மக்களும் இணைந்து இந்த பொது நூலகத்தை கட்டுவது.
- ஊரவர்கள் சிரமதானம் செய்வதாகவும் ,அரைவாசி வேலையை தாங்களே பொறுப்பெடுத்து செய்வதாகவும் சொல்லப்பட்டது உதாரணமாக …அத்திவாரம் வெட்டுதல் ,கல்லரிதல் போன்றவேலைகள் .
- இவ்வேலைகளை அந்த காணியில் உள்ளவர்களும் அதை சுற்றியுள்ள எம்மூர் மக்களையும் சேர்த்து முன்னெடுப்பதென சொல்லப்பட்டது.
- புலம் பெயர் நாட்டில் இதற்காக பணம் சேர்ப்பது போல் எமது நாட்டில் பரந்து வாழும் எம்மவரிடமும் நிதி சேர்ப்பதேன்று ஏற்றுக்ககொள்ளப்பட்டது.
- இந்த பொது நூலகம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வாழும் எமூரவர்களுக்கு ஓர் உறவுப்பாலமாகவும் பொதுச்சொத்தாக இருக்கக்கூடியதாக விரைவில் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது.
- மண்டப பராமரிப்பு தொடர்பாக கட்டிடம் கட்டி முடிந்த பின் அதை கையயாளுவதெதன முடிவுசெய்யப்பட்டது.
முடிவுகள்
- இம்மாதம் முடிவதற்கு முன் 5000 ஐரோ அனுப்புவது .
- உடனடியாகவே அங்குள்ளவர்கள் வேலைகளை ஆரம்பிப்பது
- கட்டிமுடிப்பதற்கு தேவையான மிகுதிப்பணத்தை அடுத்த வருடம் 2015 மாசி மாதத்திற்குள் சேர்ப்பது.
- அனைத்து விபரங்களையும் இணையத்தில் வெளியிடும் முகமாக கிராம அபிவிருத்தி சங்ககத்தின் சார்பில் ஒரு தொடர்பாளரை ஏற்படுத்துவது .
இக்கூட்டத்தில் பங்கு பற்றியோர்
ஹென்றி,வின்சன் பிரான்ஸ்
தாசன் ஜெர்மனி
தவராஜா டென்மார்க்
ரத்னா நோர்வே
யோகராஜா ,புஷ்பராஜா இலங்கை