அம்மா
தன்னுள்ளே
உயிர் வளர்த்து
தாங்கொணா
நோய்க் குணங்கள்
சகித்து
தன்சுவை துறந்து
சேய்காக்கும்
ஜீவனமே
வாழ்வாய்க் கொண்டு
நாட்கள் நகர
முட்டிய வயிறு
மூச்சடக்க
எட்டி நடந்து
ஓர் நாள்
குத்தும் வயிறு
வெடிக்குமா
உயிர்துறக்குமா – என்று
அஞ்சி
ஆவி நடுங்கையிலே
கொஞ்சும் உயிர்பூர்த்து – மருத்துவர்
நெஞ்சில் சாய்க்கையிலே
வலி
பஞ்சு பஞ்சாய்
பறந்தோடும்
பாரில் வாழ்வினிக்கும்
பால் முகம்
பரிசளித்த
பாசமிகு
அம்மா வரம்
ஆயுளிற்கும்
தீரா சுகம்
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/ro/register?ref=V3MG69RO