வெள்ளந்தி மனசும்
அடுத்தோரை
பள்ளத்தில் வீழ்த்தாப்
பண்பும்
பழகப்பழக இனிக்கும்
பாமரனாய்
பவனிவந்தான்
எம் அத்தான்
யார்கண்பட்டதோ
யமன்
புற்றுநோய் வடிவெடுத்து
பொன்னான மேனிக்குள்
புகுந்து
பூவுடல்
எங்கும் படர்ந்து
மண்ணில் உடல்சரிய
மாகொடியோன்
வழிவகுத்தான்
அண்ணலே – எம்
ஆசைஅத்தானே – உன்
விண்ணுலக
உயிர் பயணம்
வெற்றியாய் அமைய
இறைவேந்தணிடம்
வேண்டுகிறோம்
உந்தன்
பிரிய மனையாள்
பேர்செல்வப்
புத்திர புத்திரிகள்
உம்சோகப்
பிரிவுத்துயர்நீங்கி
அன்றாடவாழ்வினிற்குள்
அமைதியாய்பயணிக்க
நின்புண்ணியமும்
நீ வாழ்ந்த கண்ணியமும்
நிற்சயம் துணையிருக்கும்
கவலைவிடு
அவ்விடம் நான்வருவேன்
இது உறுதி – நம்
தோழமை தொடரும்
உருவத்திற்கு தடையுண்டு
அருவத்திற்கு அதுஏது
எல்லோர்க்கும் நிரந்தரம்
அவ்விடமே
அதுவே நிதர்சனம்
குறிப்பு: எந்தன் அன்னை நலம் சொல்லு
ஆச்சி தந்தை நலம் கேட்டதாய் விளம்பிவிடு
இப்படிக்கு அருள்தாஸ்
பிரிவுத் துயரினால் வாடும் உறவுகட்கு சமர்ப்பணம்
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.