Home / ஒப்புரவன் / நற்றமிழ்ப் பெயர்கள்

நற்றமிழ்ப் பெயர்கள்

பெங்களுரில் தமிழுணர்ச்சியும் தமிழுணர்வும் பொங்கி, வழியுமளவில் கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாடும்,

கருநாடகத் தமிழர் இயக்கத்தின் திங்கள் ஏடான தமிழர் முழக்கத்தின் நூற்றி இருபதாம் இதழ் சிறப்பு மலர்வெளியீடும், தமிழர் முழக்கப் புரவலரும் அயல் நாடான டென்மார்க்கில் வாழும் தமிழரான ஒப்புரவன் எழுதிய பெண் குழந்தைகளுக்கான நற்றமிழ்ப் பெயர்கள் என்ற நூல் வெளியீட்டு விழாவும் சிறப்பாக அரங்கேறிற்று.
கடந்த திருவள்ளுவராண்டு 2043 நளித்திங்கள் 3ஆம் நாள் (ஆங்கிலம் 18.11.2012) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில், பெங்களுர்த் தமிழச் சங்க வளாகமான திருவள்ளுவர் அரங்கில் கடலலைகளா? மனிதத் தலைகளா? என்று வியக்குமளவில் மக்கள் கூட்டம் அரங்கம் நிறைந்து வழிய மாநாட்டு விழா  தொடங்கப்பட்டது.

GPR 0066விழாவிற்கு தேசிய அமைப்புச் சாராத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளரும், கட்டடக் கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தலைவரும், தமிழர் முழக்கம் இதழின் புரவலருமான நா.ப.சாமி, பி.காம், எல்.எல்.பி, அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.பெங்களுரில் இயங்கிவரும் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி நிறுவனரும் முதல்வருமான பேராசிரியர் சி.இராமமூர்த்தி அவர்கள் முன்னிலையில் விழா தொடங்கிற்று.
கருநாடகத் தமிழர் இயக்க அமைப்பாளரும், பெங்களுரிலிருந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் திங்களிதழான தமிழர் முழக்கத்தின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான வேதகுமார் அவர்கள் மாநாட்டின் நோக்கங்களையும் இதழின் இலட்சியங்களையும், கொள்கை விளக்கங்களையும் குறித்து விளக்கஉரை நிகழ்த்தினார்.
தமிழர் முழக்கம் இதழின் நூற்று இருபதாம் இதழாக மலர்ந்த சிறப்பு மலரை ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான கவிக்குரிசில் இரா.பெருமாள் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார். டென்மார்க் தமிழர் ஒப்புரவன் எழுதிய பெண்குழந்தைகளுக்கான நற்றமிழ்ப் பெயர்கள் என்ற நுலினை சென்னையிலிருந்து வருகைத் தந்த முனைவர் தமிழப்பனார் வெளியிட்டுப் பேசினார்.
இலங்கையின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், இலங்கையின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேசுவரன் அவர்களும் ஈழமக்கள் நிலை குறித்து விளக்கமாக சிறப்புரை ஆற்றினார்கள்.
இலங்கையைச் சார்ந்த முல்லைத்தீவு மாவட்ட பிரதேச சபையின் துணைத்தலைவரான சிவலோக நாதன் செந்தூரன் அவர்களும், பெங்களுர்த் தமிழ்ச் சங்கத் தலைவரும், ஊற்று ஆசிரியருமான கோ.தாமோதரன் அவர்களும், சென்னையிலிருந்து வந்த திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கருநாடகக் கிளைத் தலைவர் ப.பக்தவச்சலம் அவர்களும் கலந்துகொண்டார்.

GPR 0092தமிழர் முழக்கம் சிறப்பு மலரை பெங்களுர்த் தமிழ்ச் சங்க மேனாள் செயற்குழு உறுப்பினர் நா.தமிழ்ச்செல்வி அவர்களும், மாநாட்டு வரவேற்புக் குழு தலைவருமான வெற்றியாளன் அவர்களும், தோழர் எம்.ஏ.கிருட்டிணன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். விழாவின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய மக்கள் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான சுகந்தா துசிதர் அவர்களும், மக்கள் தொண்டர் எம்ஜிஆர் மணி அவர்களும், ஒப்புரவனின் நற்றமிழ்ப் பெயர்கள் என்ற நூலினை பெற்றுக் கொண்டர்.
தமிழர் முழக்கம் இதழின் காப்பாளரும், புலவரும் பொதுவுடைமைப் பாவலருமான திருவள்ளுவர் சங்கத் தலைவர் கி.சு.இளங்கோவன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழர் முழக்கம் இதழ் பொறுப்பாளர் பால.நல்ல பெருமாள் அவர்கள் சார்பாக விழா பொறுப்பாளரும் நெருப்பலைப் பாவலருமான இராம.இளங்கோவன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்களை தோழர் தனராஜ் அவர்கள் வாசிக்க, பொதுமக்கள் கையொலி எழுப்பி வரவேற்று வழிமொழிய கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்.
1. இலங்கையில் இறுதிக்கட்டப் போர் என்னும் பெயரால் சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்பு நடவடிக்கைளின் முகத்திரை பல முனைகளில் கிழிக்கப்பட்டிருந்தாலும், அண்மையில் ஒன்றியநாடுகள் அவையின் (அய்.நா) உள்ளக உசாவல் அறிக்கை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இலங்கையில் போரில் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அய்.நா. அவை தவறிவிட்டது என உள்ளக உசாவல் குழுத் தலைவர் சார்லசு பெற்றி கூரியுள்ளார். இதன் மூலம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் முடிவுக்கு வந்ததாகச் சிங்கள இனவெறி அரசால் கூறப்படும் போரின் போது நிகழ்ந்த அவலங்கள் மீண்டும் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்துள்ளன. இலங்கை அரசின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களை உசாவிட அனைத்துலக உசாவல் குழுவை அமர்த்திட வேண்டுமென்று இம்மாநாடு, ஒன்றிய நாடுகள் அவையை வற்புறுத்துகிறது.
2. பல ஆண்டுகளாகத் தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திவரும் இலங்கை அரசு, 2009 இல் இறுதிக்கட்டப் போர் என்னும் பெயரால் முப்படையின் துணைக் கொண்டு கொன்று குவித்து. தொடர்ந்து, இலங்கயின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்கலின் வாழ்வாதாரங்களைக் கேள்விக்குறியாக்கி வருகின்றது. தமிழர் நிலப்பகுதிகளைப் படைப்பிரிவினர் கவர்ந்து முகாம் அமைத்துத் தொடர்ந்து தொல்லை விளைவித்து வருகின்றனர். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து உயிரிழந்து அல்லல்பட்டும் வருகின்றனர். அமெரிக்காவும் பிற நாடுகளும் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இருந்து படைப்பிரிவுகள் அறவே அகற்றப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியா இலங்கை இரு நாட்டு இராணுவ ஒத்துழைப்புக் குறித்து ஆராய இந்திய படைத் தளபதி அடுத்தத் திங்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, பயிற்சி, போர்த்தளவாடங்கள், கூட்டுப்பயிற்சிகள் தொடர்பான ஒத்துழைப்புகளை வலிப்படுத்திக் கொள்வது தொடர்பாக உரையாட்டுகள் நடைபெறவுள்ளதாக நம்பப்படுகிறது. இலங்கையுடன் எந்தவிதமான பாதுகாப்பு உறவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிப்பதை நிறுத்திட வேண்டுமென்றும் இம்மாநாடு வற்புறுத்துவதுடன் அதற்கான முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறது.
3. கருநாடக மாநிலத்தில் இயங்கிவரும் கிறித்துவத் தேவாலாயங்களில் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கன்னடர்கள் போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் வாழூம் தமிழ்க் கிறித்துவர்கள் தமிழில் வழிபாட்டினை மேற்கொள்ளுவதற்குக் கருநாடக அரசு தக்க நடவடிக்கைகளை எடுத்துத் தமிழ்க் கிறித்துவர்களின் மன உளைச்சலைப் போக்கிட முன்வர வேண்டுமென்று இம்மாநாடு வெற்புறுத்துகிறது.
4. கருநாடகத்தில் தமிழை முதன் மொழியாகவும் மூன்றாம் மொழியாகவும் கொண்ட பள்ளிகளில் தமிழாசிரியர்கள் அமர்த்ததிற்குக் கருநாடக அரசின் கல்வித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மொழிச் சிறுபான்மையரான தமிழ் குழந்தைகள் தம் தாய்மொழியைக் கற்க அரசு உதவிட வேண்டுமென்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
கருநாடகத் தமிழர் இயக்கத்தின் அமைப்பாளராகவும், தமிழர் முழக்கம் ஆசிரியரும் வெளியீட்டாளருமான வேதகுமார் அவர்கள் முதுமையை எட்டிய அகவையிலும் அயராமல் உற்றத் தூணாக விளங்கி தமிழ்ப் பணியாற்ற உறுதுணையாக இருந்த அவரது வாழ்க்கை துணைவியார் வேதவள்ளி வேதகுமார் அவர்களையும், மூத்த சகோதரர் எத்துராசு அவர்களையும் இழந்து வாடியே தவித்த நிலையிலுங்கூட தமிழுக்காகத் தன்னைக் கொடுத்து தொண்டாற்றி வரும் இவரைப் பாராட்டும் வகையில் ஊக்கப்படுத்தும் விதத்தில் மாலைகளும் பொன்னாடைகளும் கீழ்க்காணும் தமிழ்ப் பிரமுகர்கள் அணிவித்தனர்.
பெங்களுர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் தலைவர் கோ.தாமோதரன், அக்சயாக் கல்லூரியின் நிறுவனரும், முதல்வரும், பெங்களுர்த் தமிழாசிரியர் சங்க முன்னாள் தலைவருமான அரிமா. ஆ.து.மகேந்திர வர்மா, திருவள்ளுவர் மக்கள்  நற்பணி மன்ற கருநாடகக் கிளைத்தலைவரும் நற்பணி செம்மலுமான தேனிரா உதயகுமார், உலகத் தமிழ்க் கழகத்தின் பெங்களுர் தண்டு கிளை தலைவர் கி.சி.தென்னவன், திருவள்ளுவர் சங்கம்-சிறீராமபுரம், கருநாடக திராவிடர் கழகம். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் கருநாடகக் கிளை தலைவரும் சொல்லோவியக் கவிஞருமான சுவாமி இராமானுசம், நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன், உட்பட பலர் பாராட்டினையும் வாழ்த்தினையும் பொன்னாடை மாலைகள் அணிவித்துச் சிறப்பித்தனர்
இதழாசிரியர் வேதகுமார் அவர்கள், சிறப்பு மலருக்காகவும் மாநாட்டுக்காகவும், வெற்றிப்பெற உடனிருந்து உழைத்த பொதுவுடைமைப் பாவலர் புலவர் கி.சு.இளங்கோவன், சொல்லோவியக் கவிஞர் சுவாமி இராமானுசம், தனராஜ், நெருப்பலைப்பாவலர் இராம.இளங்கோவன் உட்பட பலருக்கு பொன்னாடை அணிவித்து பாராடடினார்.
இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈழம் மலரும் வரை எந்தவித மாலைகள் பொன்னாடைகள் போன்ற எதையும் ஏற்றுக் கொள்ளாததால் நினைவுப் பரிசுகளாக கேடயம் பாட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது. விழாவின் வரவேற்புக் குழு வெற்றியாளன் தலைமையின் கீழ் தொழிலதிபர்களான து.சண்முகவேலன், பூ, மகேந்திரன், சுந்தரவேல், நுண்கலைக் கலைஞர் சிறீதரன், திரைப்பட இயக்குநர் பொங்குதமிழ் கணேசன், ஆகியோர் செயல்பட்டனர். திட்டமிட்டபடி  விழா வெற்றிகரமாக இரவு 9.00 மணிக்கு இனிதாய் நிறைவுற்றது.
செய்தித்தொகுப்பு: நெருப்பலை பாவலர் இராம இலங்கோவன், பெங்களூர்

About ratna

3 comments

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/ru/join?ref=UM6SMJM3

  2. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  3. Hello! Do you know if they make any plugins to assist with SEO?
    I’m trying to get my blog to rank for some targeted
    keywords but I’m not seeing very good results.
    If you know of any please share. Thank you! You can read similar text here: Eco blankets

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang