மயிலிட்டி சந்தி தொடக்கம் அன்ரனி புரம் வரை இன்னும் விடுவிக்கப்படாத பகுதியாகவே இருப்பினும் பருத்தித்துறை நோக்கிய பிரதான இவ் வீதியூடாக காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பிரயாணம் செய்ய அனுமதித்துள்ளார்கள்(14.04.2018). பிரயாணம் செய்யும் மயிலிட்டி, பலாலி மக்கள் தமது வீடுகள், கட்டடங்கள் இல்லாது வெறுமையாய் காட்சி தருகின்ற தம் வாழ்விடங்களில் எங்கே தமது காணிகள் என அடையாளம் தெரியாது அங்கலாய்க்கும் காட்சி கண்களில் நீரை வரவைக்கின்றது. எமது ஊறணி நிருபர்
பலாலி சந்தியில் அமைந்துள்ள இராணுவத்தின் உல்லாச விடுதி.
பலாலி அன்ரனிபுரத்து வீட்டுத் திட்டம்.
பலாலி ஆரோக்கியமாதா ஆலயம்- இதில் தான் நாளை புதிய குருமணி தனது முதற் திருப்பலியை நிறைவேற்றுவார்.
பலாலியில் வாழ்விடங்களை அழித்து மைதானம் போடப்பட்டுள்ளது.
மயிலிட்டியில் காணிக்கை மாதா ஆலய வளவில் ?அமைந்துள்ள இராணுவத்தின் உல்லாச விடுதி.
மயிலிட்டியில் அமைத்துள்ள இராணுவத்தின் கேளிக்கை விடுதி. நான் நினைக்கிறேன். இவ்விடுதி மற்றும் மேலுள்ள உல்லாச விடுதியையும் தவிர்த்து பருத்தித்துறை பிரதான வீதி இரு மருங்கும் மயிலிட்டியில் எந்த ஒரு வீடுகளும் கண்ணுக்குத் தெரியவில்லை.