ஊறணி பங்கில் மகா ஞான ஒடுக்கம் ஆரம்ப விழா சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென சிறப்பு பேருந்தும் போக்குவரத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர் வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு இம்மகா ஞான ஒடுக்க நிகழ்வு ஆரம்பமாகின்றது.
மகா ஞான ஒடுக்க நிகழ்வானது ஊறணி பாங்கில் 4 வலயங்களாக பிரிக்கப்பட்டு செயற்ப்படுத்தப்படும். ஊறணி, வள்ளுவர் புரம், முலவை, ஆவளைச் சந்தி என சேர்த்து ஒரு வலயமாகவும், அன்ரனிபுரத்தில் 2 வலயங்களும், வளலாயில் ஒரு வலயம் என 4 வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயத்திற்கும் நான்கு நற்செய்தியாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.
ஊறணி வலயத்திற்கு மத்தேயு எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேற்படி மகா ஞான ஒடுக்கத்தின் ஆரம்ப நிகழ்வு ஊறணியிலும் நிறைவு அன்ரனி புரத்திலும் நடைபெறும். எனவே இதன் ஆரம்ப நிகழ்விற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்நிகழ்வில் காங்கேசந்துறை தொடக்கம் அன்ரனிபுரம் வரையிலும் உள்ள கத்தோலிக்க இறைபக்தர்கள் 500 பேர்களுக்கு மேல் பங்கு கொள்ள விருக்கின்றனர். அன்றைய தினம் தேனீர் விருந்துபசாரத்திற்கும் ஏற்பாடாகியுள்ளது. இத்தேனீர் உபசாரத்திற்கான அனுசரணையை திரு.திருமதி ஐஸ்ரின் விமலதாஸ் – அஞ்சலோ மீனா குடும்பத்தினர் வழங்குகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ஞான ஒடுக்கமானது உயிர்ப்பு ஞாயிறு வரை தொடர்ந்து நடைபெறும்.இந் நிகழ்விற்காக விசேட விதமாக 8 இற்கு மேற்பட்ட குருக்கள் வருகை தந்து இங்கேயே தங்கியிருந்து வீடுகள் தரிசிப்பு, குடும்ப ஒற்றுமை, பக்தி முயற்சிகள், அருட்சாதனங்கள் வழங்கல் போன்ற செயற்றிட்டங்களில் ஈடுபடுவர்.
எதிர்வரும் ஞாயிறு பி.ப 5.00 மணிக்கு ஒவ்வொரு வலயங்களுக்குமான கொடிகள் ஏற்றப்பட்டு திருப்பலியுடன் நிகழ்வு ஆரம்பமாகும். திருப்பலியில் ஞான ஒடுக்கக் காலத்தில் வலயங்களில் உள்ள ஆலயங்களில் எரிய விடும் 4 விளக்குகள் ஆசிர்வதிக்கப்பட்டு திரிகள் ஏற்றி வைக்கப்படும். இத்திரியில் ஏற்றப்படும் ஒளியே ஞான ஒடுக்கக் காலத்தில் வீடுகளிலும் ஏற்றி வைக்கப்படும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.45 மணிக்கு யாழ்ப்பாணம், சுண்டுக்குழி,விதானையார் லேனில் புறப்படும் பேருந்து 3.00 மணிக்கு ஆனைக்கோட்டை சும்மா ரீ றூம் வந்தடைந்து 3.10 மணிக்கு மானிப்பாய் அந்தோனியார் ஆலயம் வந்து அதனூடாக 3.40 க்கு சீந்திப்பந்தல் வந்தடைந்து 4.10 க்கு ஊறணி சென்றடையும்.