அனைவருக்கும் வணக்கம்
ஊர்மக்களாகிய உங்களிடம் ஒரு சில விடயங்களை தெரியப்படுத்துவது எங்கள் கடமை என நினைக்கிறோம்.
அதாவது இந்த பாதை போடும் திட்டம் அறியத்தரப்பட்டபோது, ஊறணி viberஇல் இதற்கான விருப்பத்தை கையடையாளம் இடுவதன் மூலம் தெரிவிக்கும் படி திரு . சூரியன் அவர்களால் கேட்கப்பட்டு , பெருபாலானவர்கள் கரையோர பாதை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்கள் , மேலும் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் viber இல் இருக்கும் நீங்கள் எல்லோரும் அறிந்ததே. அதன் அடிப்படையிலேயே இந்த பாதை அமைப்பதற்கான திட்டம் பாதை அமைப்பு குழுவினரால் முன்வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டே ஊர்மக்கள் நீங்கள் உங்கள் நிதிப்பங்களிப்பை ஒரு ஊர்க்கடமையாக செய்து கொண்டிருக்கிறீர்கள், அதற்கு உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக ,ஊரில் உள்ள ஊரவர்களிடமிருந்து அதாவது கடற்கரை பாதை அமைக்கும் போது எடுக்கப்பட போகும் ஒரு பகுதி காணியின் உரிமையாளர்கள் என நாம் தெரிந்துகொண்ட சில ஊர்மக்களிடம் கலந்துரையாடி கையெழுத்தும் பெற்று, கடற்கரை பாதுகாப்பு அதிகாரசபையிடமும் உத்தியோகபூர்வமாக அறிவித்து, எங்கள் விண்ணப்ப கடிதத்தையும் வழங்கிய பின் அவர்கள் சரி நீங்கள் வேலைகளை செய்யலாம் என்ற வாய்மூல அனுமதி தந்த பின்பே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது .
ஆனால் எமது ஊரை சேர்ந்த ஒருவர் தனது காணியில் இந்த பாதை அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் கடற்கரை பாதுகாப்பு அதிகாரசபையினருடன் கதைத்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (22.03) கடற்கரை பாதுகாப்பு அதிகாரசபையினருடன் அவசரமான சந்திப்பை எமது பங்குத்தந்தை ராஜன், குளோட், சாந்தசீலன் ஆகியோர் ஏற்படுத்தியிருந்தார்கள்.
சுமூகமான சந்திப்பின் பின்னர் பாதையினூடு காணிகள் வரும் என்று நீங்கள் தெரிந்து கொண்டவர்களிடம் தனிப்பட்ட முறையில் கையெழுத்து வாங்கி தருமாறு கேட்டிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் இத்திட்டத்திற்கு கூடுதலான உதவிகளை செய்வதாகவும்
வாக்களித்துள்ளார்கள்
அத்துடன் இன்று வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் காணிகள் இருப்பதாகவும் அவர்களிடம் அனுமதி பெற்றீர்களா என்ற ஒரு கேள்வி viber இல் எழுப்பப்பட்டிருப்பதால் அப்படி கடற்கரையோரம் காணி இருபவர்கள் யாரவது வெளிநாட்டில் அல்லது வெளிஊரில் வசிபவர்கள் இருந்தால் அவர்களிடமும் தனிப்பட்ட முறையில் கையெழுத்தை பெறலாம் என்று உள்ளோம். ஒரு சில பெயர்கள் எங்களிடம் உள்ளன அவற்றை வெளியிடுவோம் இவர்கள் தவிர்ந்து வேறு யாராவது உங்கள் காணிகள் கடற்கரையோரம் வருகிறது என்று தெரிந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
கூடுதலாக யாருடைய காணியையும் எடுக்காமல் பாதை அமைக்கவேண்டும் என்றுதான் திட்டமிடப்பட்டுள்ளது . ஆனால் பாதை அமைக்கும்போது காணிக்கும் பாதைக்கும் இடையில் சிறிய இடைவெளி வரும் தானே அந்த இடைவெளியை உரிமைகோரி பிரச்சனை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவே ஒரு சிலரிடமிருந்து இந்த கையெழுத்து தேவைப்படுகிறது . இந்த பாதை கடற்கரையோரமாக அமைக்கப்படுவதால் மேலும் கடல் அரிக்காமல் எல்லோருடைய காணிகளும் பாதுகாக்கப்படும் என்றும் நாம் நம்புகிறோம்.
அதுவரை இந்த பாதை போடும் வேலைத்திட்டத்தை தற்காலிகமாக இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கின்றோம்.
கையெழுத்துக்களை விரைவில் பெற்று மீளவும் எமது வேலைகளை தொடருவோம்.
இதுவரை பங்களிப்பு செய்யாதவர்கள் உங்கள் நிதிப்பங்களிப்பை நீங்கள் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதையும் அறியத்தருகிறோம். இந்த நிதி நிச்சயமாக ஊர் அபிவிருத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.
நன்றி
கரையோர பாதை அமைக்கும் குழு
குளோட் , ஜோன்சன், விஜயகுமார், ராஜன், ரட்ணா
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?