எமது கோவில் கட்டுமானம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக கட்டிடக்குழு கலந்துரையாடி பின்வரும் விடயங்கள் கீழே பதிவிடப்படுகிறது.
- கோவில் கட்டுமானப் பணியானது மூன்று கட்டங்களாக செய்வதற்கே திட்டமிடப்பட்டது இதற்கான காரணம் கட்டுமானத்திற்கான நிதியை ஏற்பாடு செய்வதில் ஏற்படக்கூடிய தாமதங்கள் காரணமாகவும், மேலும் இலங்கையில் காலங்கள் கடந்து போகும் போகுது பொருட்களின் விலைகளில் பாரியளவு மாறுபடுகின்ற காரணத்தினாலும் கோவில் முழுமைக்குமான மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை.
2.மூன்று கட்டங்களில்( டோம் பகுதி , நடுக்கோயில் , முகப்புப்பகுதி )தற்போது நடுக்கோயில் பகுதி மட்டுமே கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்கான மதிப்பீடு 6212786/-( அறுபத்திரண்டு இலட்சத்து பன்னிரெண்டு ஆயிரத்து எழுநூற்று எண்பத்தாறு ரூபா.) எனினும் கட்டுமான நடைமுறை நியமங்களின்படி இம்மதிப்பீட்டில் 15% உயர்வு ஏற்படக்கூடும் எனவே உண்மைச் செலவினமானது எழுபத்தொரு இலட்சத்து நாற்பத்திநான்காயிரத்து எழுநூற்று மூன்று ரூபாவரை உயரக்கூடும்
3.தற்போது வரை கிடைக்கப் பெற்ற நிதி முப்பத்தைந்து இலட்சத்து எழுபதினாயிரம் ( 3570000 )
- ஒப்பந்தக்காரர் :- விமலானந், V.V. Construction பிரதானவீதி யாழ்ப்பாணம்.
- ஒப்பந்தக் காலம்:- மே மாதம் 31 வரை
- பணம் சேகரிப்பதற்கான திட்டமாக தாயகத்தில் வசிப்பவர்களிடம் 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளிற்கு தலா 5000/- வீதம் 10000/- அறவிடுவதெனவும் புலம்பெயர் தேசங்களில் அந்தந்த நாடுகளின் ஊறணி அமைப்புக்கள் மூலமும், அமைப்புக்களில் இல்லாதவர்களிடம் மற்றும் அமைப்புகளின் மூலம் பணம் கொடுக்க விரும்பாது நேரடியாக பணம் கொடுக்க விரும்புவர்களுக்கு கோயில் கட்டிட நிதி சேகரிப்பிற்கான வங்கிக்கணக்கினை தெரிவித்து விரும்பிய தொகையை செலுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டது.மேலும் எமது பங்குத்தந்தை கோவில் கட்டும் நிதி சேகரிப்பிற்கென வைபர்மூலம்( viber ) மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தை பயன்படுத்தி புலம்பெயர் தேசங்களில் உள்ள தன்னார்வ தொண்டு நிதி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு நிதியை பெறும் நடவடிக்கைகளை எமது புலம்பெயர் ஊறணி மக்கள் செய்யலாம் எனவும் அதே போன்று தாயகத்தில் உள்ளவர்களும் பங்குத்தந்தையின் கடிதத்தை பயன்படுத்தி தன்னார்வ தொண்டு நிதி நிறுவனங்களை தொடர்பு கொண்டு நிதி சேகரிப்பை செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது ( பங்குத்தந்தையின் கடிதம் வைபர் மற்றும் முகப்புத்தகத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது எனினும் விரும்பியவர்கள் கடிதத்தை தருமாறு கோரினால் மீளவும் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும்)
கோயில் கட்டிட நிதி வங்கிக்கணக்கிலக்கம்:- 8005393899 commercial bank chunnakam jaffna srilanka
மேலும் நடுக்கோயில் முடிவடையமுன் எமது ஊரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பழைய கோவிலின் முகப்பையும் உறுதிப்படுத்தி எம்மால் ஏற்கனவே பதிவிடப்பட்ட படத்தில் மேம்படுத்திய வடிவத்தினை விரும்பியவர்கள் வடிவமாக தயாரித்து பதிவிடவும்.
சகலரினதும் ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கிறோம்.
அன்புரிமையுடன் கட்டிடக்குழு