மிகவும் சிறப்புற நடைபெறும் எமது புனிதராம் அந்தோனியாரின் திருவிழா
இம்முறை covid 19 பெருநோய் காரணமாக சிறப்புற கொண்டாட முடியவில்லை
ஊறணி உறவு ஒருவரின் இன்றய பதிவு…………
ஆனி பன்னிரெண்டு ஊறணித்தரையும் கடலும் கரையோரங்களும்
தூரிகையால் வரைந்ததுபோல்
தூய்மையாய் பளபளக்க
நேர்வாகு எடுத்ததுபோல்
சீராகவீதியெங்கும் தோரணங்கள்
காற்றாலே அசைந்தாடும்
கோவிலின் வெளிதனில்
கொலுவாக மேடையெழும்
ஆலயஆயத்த ஆளணி வெள்ளோட்டமும்
பக்திகீத பாடல்ப் பயிற்சிகளும்
பரபரக்கும்
ஊறணி ஊரெங்கும்
சீராக மனிதமனம் லேசாய்
சிரிப்பாக குளுமைமனத்தோடு
கோவில்வரும் −இளையோர்
தூக்கல் அலங்கார உடையணிந்து
துள்ளல் சிரிப்போடு வலம்வருவார்
பார்க்கும் இடமெலாம் பல்லுயிரும்
பூக்கும் மனத்தோடு
புதுமையாய் காட்சிதரும்
மாலை மூன்றுமணி
ஆலைய மணியோசை
ஆர்ப்பரித்து மகிழ்வதுபோல்
அலைஅலையாய் ஒலியெழுப்பும்
பரபரப்பாய் பக்திப் பண்ணொலி
விண்ணதிரும்−பின்னால்
முக்தி செபமாலை தொடர
புனிதரும் கூடுமெழும்
மக்கள் முன்னகர
மணியோசை வான்சேர
ஐயன்அந்தோனி யேசுவைக் கரமேந்தி
ஊறணிஊர்வீதி பவனிவரப் புறப்படுவார்
ஆங்காங்கே மாலைகளும்
மலர்ச் சொரிவுகளும்
சோளப்பொரித் தூறல்களுமாய்
ஆரவார பக்திச்செபங்களுடன்
ஓரக்கடலோரம் ஊர்ந்துநகரும்
ஆங்காங்கே ஊறணிக் குடும்பங்கள் புனிதருக்கு மாலையிட்டு வாசனைப்பொடித்
தூபமிட்டு வணங்கி வழியனுப்ப
வணக்கக் கோவில்வந்தடையும்
மாலைப் பலிப்பூசையுடன்
மனநிறைவாய் பன்னிரெண்டு
நிறைவுபெறும்.
ஆனி பதின்மூன்று
ஆலய முன்வெளியில்
ஊறணி மண்ணோரும்
பேரணியாய் புனிதர் பக்தர்களும்
ஓரணியாய் காத்திருக்க
திருநாள் திருப்பலி இனிது
நிறைவடைந்து புனிதர்தேர்
சுற்றிநிற்கும் பக்தர்களை
சூழவலம்வந்து
கேட்கும் வரமெலாம்
ஆர்வமுடன் அவர்கேட்டு பாசத்துடன் நல்முயற்ச்சிகட்கு பக்கத்துணையாய்
அந்தோனிமாமுனியும்
அன்பாய்வரம் ஈந்திடுவார்
நேர்மை நெறிகளுடன்
நீடூழி நாம்வாழ
நேசமிகு சீர்சொருப
ஆசீர்வாதத்துடன் பெருவிழாவும்
நிறைவுவரும்
ஆசையுடன் ஆள்மனதின் அன்றையநாள் எண்ணங்களை
இன்றைய நாளினிலே மீட்டுவதில்
ஈரநீரோடு லேசாய் புனிதர்நாளென இன்பமும்
பிறக்கிறது
இன்றுபோல் என்றும்நாள் இருந்திடா நன்றுநாளும் நாளைவரும் அன்றுநாங்கள்
வந்துநின்று எம்புனிதர்மண்ணில்
புகழ்பாடித் தொழுதிட
வேண்டு கின்றோம்
வள்ளலே !அருள்தாராயோ? அந்தோனிமாமுனியே !
ஊறணிமண் உறவுகட்கு
இனியஅந்தோனியாரின் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.
-அருள்தாஸ்