ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி லில்லி றீற்றா
இறபாயேல்(Sr.Rock)17.01.2025 அன்று புனித ஜோசப் இல்லம் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார்.
இவர் காலம் சென்றவர்களான திரு/திருமதி. இறபாயேல் மாத்தம்மா தம்பதிகளின் மகளும், காலம் சென்ற சகோதரர்களான திருமதி.செல்வராணி(தாயீசம்மா) மரியாம்பிள்ளை, அருட்சகோதரர் ரொபேர்ட் இறபாயேல், திரு.ஸ்டீபன் இறபாயேல், மற்றும் அருட்பிரகாசம் இறபாயேல்(யேர்மனி), அருட்சகோதரி செலஸ்ரினா மற்றும் கனடாவில் வசிக்கும் சேவியர் இறபாயேல் ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார்.
அன்னாரது புகழுடல் 18.01.2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 15.00 மணிக்கு இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு அதன் பின் இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை ஊரவர் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொளப்படுகின்றீர்கள்