எமது பாடசாலையின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்டு ( 1990 இற்கு முன் ) காணப்படுகின்ற மண்டபம் கடந்த கால யுத்த நடவடிக்கை காரணமாக பழுதடைந்து காணப்படுகின்றது அதன் தூண்கள் உறுதிவாய்ந்தமையாக காணப்படுவதனால் முதலில் கூரை பகுதியை திருத்துவதன் மூலம் அதனை பயன்படுத்தக்கூடிய நிலைக்கு மாற்றக்கூடியாததாக அமையும். இந்த மண்டபம் பாடசாலையின் ஆரம்ப கால சின்னம் ஆக பேணப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் கூரையை திருத்துவதற்கு ஒரு பகுதி செலவை ஊறணியைச் சேர்ந்த புலம்பெயர் உறவு ஒருவர் வழங்க முன்வந்துள்ளார். எனவே மாணவர்களின் எதிர்கால தொழில்நுட்ப வளர்;சிக்கு முகம்கொடுக்கும் வகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் பாடசாலை மண்டபத்தின் கூரை பகுதியை திருத்துவதற்கு தங்களால் இயன்ற உதவிகளை எதிர்பார்த்து இருக்கின்றோம்.
