Home / 10 ஆவது ஆண்டு / ஊரவன்-வாழ்த்துக்கள்

ஊரவன்-வாழ்த்துக்கள்

உறவுகளை இணைக்கும்  ஊறணி இணையம் பத்தாம் ஆண்டின் பசுமை பதிவுகள்

ஏதிலிகளாய்
வெளிநாட்டில்
இடம் பெயர்ந்தோர்க்கும்

எதிரிகளால்
உள்நாட்டில்
இடம் பெயர்ந்தோர்க்கும்
இணைப்புப் பாலமாய்
இன்றிருப்பது
இணையம் என்றால் தவறாகாது

ஊரின்
நேற்றைய உறவுகளையும்
இன்றைய ஊர் மனிதர்களையும்
நாளைய
எம் மழலைத் தலைவர்களையும்

நொடிப் பொழுதில் – எங்கும்
கண்டு களிக்க
கலைக் கதம்பமாய்
கண்முன்னே வருவது
ஊறணி வலையத்தளம்
அவ் வலைத்தளம்
ஆண்டுபத்தை
எட்டியுள்ளதை எண்ணி
மட்டிலா மகிழ்ச்சியும்
மாண்புறவளர
வாழ்த்தி நிற்க்கின்றோம்

நம் மண்ணில் விளைந்த
மொழி வழிக்கலைகள் அழியாது
அடுத்த தலைமுறைக்கு
எடுத்துச்செல்ல
புகுந்த நாட்டின்
புதிய மொழிக் கலைகளில்
புதிய தலைமுறை
புகுந்து விளையாடும்
சிறப்புகளை
புதினமாய் உலகெங்கும்
எடுத்துச்செல்ல
ஊறணி வலைத்தளம்
ஊக்கமுடன் உழைத்ததை
உளமகிழ்ந்து பாராட்டுகின்றோம்

எம்மூரின் வேரூற்றுக்களிலும்
அறிவு மதிகளும்
தாமரைகளும்
தோன்றலாம் முயற்சித்தால் – என்று
ஊக்கம் தரும் ஆக்கங்களை
உற்சாகமாகப் பதிவு செய்த
ஊறணி இணையத்தை மெச்சுகிறோம்

இயந்திரத்தை விஞ்சி
வேகமாய் ஓடும்
புகு இட வாழ்வினிலே
உறக்கம் தொலைத்து
உறவுகள் தொலைத்து
ஊர் உணர்வுகள் தொலைத்து
பணமுடை தீர்க்க
பிள்ளை
படிப்பினை முன்னேற்ற
ஓடிப் பறக்கும் உலக வாழ்வினிலே
நேரம் ஒதுக்கி நித்திரைசுருக்கி
காலம் பாராது உழைத்த
இரட்ணராஜாவையும்
பாராட்டுகிறோம்

மலரும் பிறந்தநாட்கள்
மறைந்த இறப்புநாட்கள்
இணையும் மணநாட்கள்
இணைந்து சிறந்த
அறுபதாம் மணநாட்கள் – என்று
நம் வேர்கள் நகரும் வாழ்வியலை
முடிந்தவரை
படமாய் ஒளிப்படமாய்
பாரெங்கும் உள்ள உறவுகட்கு
படைக்கின்ற இணையம்
சிறப்புறுக

எம்மூர் மனிதர்க்குள்ளும்
அவர் மனதிற்குள்ளும்
கவிதைகளும் நல்ல
கருத்துக்களும்
மறைந்து உறைந்து
மடிந்து சுருங்கி
புதைந்து இருந்ததை
ஊக்கம் கொடுத்து
ஆக்கமாக
ஆச்சரியப் பதிவாக
இணையம்
இனங் காட்டியதை
எண்ணி வியக்கிறோம்

ஊறணி உறவுகளை
உயர்குடி மக்களாக
மெருகேற்ற
திருமறையும் பொதுமறையும்
சேர்த்துக்குழைத்து
தெவிட்டாத தேன்தமிழில்
அள்ளி வழங்கி
கண்டிமையும் கருணையுமாய்
எமை வழிநடத்தும்
அருட்தந்தை தேவராஜன்
அடிகளாரின்
குருத்துவ வெள்ளிவிழா
இலண்டனிலும் பாரிசிலும்
கொண்டாடி மகிழ்ந்த
குதூகல நிகழ்வுகளை
ஒன்றும் விடாமல்
உயர்தரமாய் ஊறணி இணையம்
தொகுத்து வழங்கியமை
என்றும் மறவாத
இனிய நிகழ்வாகும்

ஊரை இழந்த போதும் – ஊர்
உறவுகள் பலர் ஒன்றாய்
சீந்திப் பந்தல் சிற்றூரில் உறைந்து
வேந்தனைக் கையிலேந்தும்
எங்கள் மாந்தராம்
புனித அந்தோனியாரின்
மாண்புமிகு கொடியேற்றவிருந்தும்
மகிமைதரும் திருநாள் திருப்பலியும்
ஆண்டுதோறும் தவறாது
அற்புதமாய்
ஊறணி இணையத்தில்
நிழற்படமாய்
நேற்றைய ஊர் நினைவுகளை
மீட்டியபெருமை
ஊறணி இணையத்தையே சாரும்

புலம்பெயர்ந்த
தாய்மண் உறவுகள்
ஆண்டு தோறும்
ஊர் மண்ணோரை
ஒருங்கிணைக்க
சின்ன வரவுகளை
சிறப்பாக வரவேற்க
எம் மனத்தின் நாயகன்
மாமுனி திருநாளை
நெஞ்சில் நிறுத்தி
எம்மில் பாசமும் நேசமும்
பற்றும் கொண்ட
குரு ராஜன் தலைமையிலே
திருப்பலி வழங்கி
சிறப்புற நடக்கும்
ஒன்றுகூடல்
ஆட்டம் பாட்டு கொண்டாடம்
பல்சுவை நிகழ்வுகளை
ஆண்டு தோறும் அள்ளிவழங்கும்
ஊறணி இணையத்தளம்
வாழ்க உயர்க வளம்பெறுக
என்று வாழ்த்தி
வணங்குகிறோம்

நன்றி

ஊரவன் (அருள்தாஸ்)

About ratna

2 comments

  1. You have remarked very interesting points! ps decent site.Raise your business

  2. Magnificent site Plenty of useful info here I’m sending it to several friends ans also sharing in delicious And certainly, thanks for your sweat!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang