Home / kks பாடசாலை கீதம்

kks பாடசாலை கீதம்

கருந்திரையாழியின் ஓரத்திலே திருக்
காங்கேசன்துறைநகர் மையத்திலே
சீரணி ஊறணி செல்வத்தினால்வரும்
செல்வர்கள் பயிலும் சீருறுசாலை

அறிவோடு ஆற்றல் அன்புநற் சீலம்
அருங்கலை வித்தக சாஸ்திரங்கள்
ஆய்ந்தநல் ஆசான் அதன்வழி ஓங்க
அன்போடு புகட்டும் அறிவியற்சாலை (கருந்திரை)

ஆயிரம் ஆயிரம் அற்புதச் சீமான்
அந்தோனியாரென்னும் அருள்வளவன்
ஆராதாயா அடைக்கல நிழலில்
அமைந்து விளங்கும் அருங்கலாசாலை ( கருந்திரை)