ஊரின் சேமக்காலையை புதுப்பொலிவுடன் புனரமைத்தல் தொடர்பாக ஏற்கனவே – udo இயங்கும் போது லண்டன் வாழ் ஊறணி அமைப்பினரின் ஆலோசனைப்படி செய்யலாமென்றும் மீளக்குடியமர்வுக்கு முன்னர் இறந்தவர்களின் படங்களைப் பொறிப்பதற்காக ஒரு இறந்தவரின் படம் பொறிப்பதற்காக 10000 ரூபாய் வாங்கி புனரமைக்க முடியுமெனவும் இதை லண்டன் நிர்வாகம் பொறுப்பெடுக்குமாக இருப்பின் ஊரின் அருட்பணி சபையினரின் உதவியுடன் முன்னெடுக்கலாமென்றும் இக் கூட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்டது. ஆயினும் தற்போது சேமக் காலையில் கட்டியிருக்கும் கல்லறைகளை உடைக்க முடியாதென்றும் அருட்பணி தெரிவிக்கிறது.
மேலும் 4 லைனில் இனி உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்றும் இனி கல்லறை கட்டுவதற்கு அனுமதி இல்லையென்றும் சிறிய பெயர் பதிக்கப்பட்ட நடுகைக் கல்லுடன் கூடிய சிலுவையே நாட்டப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
சேமக் காலைக்கு பொறுப்பாக இருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். திரு.தேவதாஸ் ரஞ்சன், மற்றும் திரு.அ.இராசநாயகம் (ராசு) இவர்கள் இருவரையும் இனிமேல் தொடர்பு கொண்டு அடக்கம் தொடர்பான இடங்களையும் விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும். எனினும் புனரமைப்புத் தொடர்பாக அருட்பணி சபையைத் தொடர்பு கொள்க. இது தொடர்பான கருத்துக்களை லண்டன் வாழ் ஊறணி அமைப்பிடமிருந்து அருட்பணி சபை எதிர்பார்க்கின்றது.