UDO அமைப்பானது தனது பெரு முயற்சியின் பயனாய் ஊறணியில் பயனுறுமிக்க அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அப்பணிகள் வருமாறு.
01. கடற்றொழிலாளர் பொது மண்டபத்திற்கென பதினைந்தரை குழி ( 1 பரப்பிற்கு 2.1/2 குழி குறைவு) காணியை வாங்கியுள்ளது.
02. Rds கட்டடத்தை அரசுடன் இணைந்து முழுமையாய் கட்டி முடித்திருக்கிறது.(Udo தனித்து கிட்டத்தட்ட 6.5 இலட்சங்களை செலவிட்டிருக்கிறது- அரசால் 1.1/2 இலட்சம் காசு இன்னும் தருமதி உள்ளது. ஆகவே 5 இலட்சம் காசை செலவிட்டிருக்கிறது.)
03. ஆலய வளவில் மலசல கூடம் இணைந்த குளியல் அறையை அமைத்திருக்கிறது.
04. ஆலய வளவில் நீர்த்தாங்கி அதற்குரிய பெரிய இரும்பு ஸ்ரான்ட் ஐ அமைத்திருக்கிறது.
05. மலசல கூடத்திற்கான நீண்ட தூர பைப் லைனை அமைத்திருக்கிறது.
இவைகளை விடவும் சிற்சில சிறிய வேலைகளையும் Udo செய்திருக்கின்றது. (இதன் முழுமையான வரவு செலவு விபரத்தை ஓரிரு நாட்களில் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். ) எனவே , ஊறணியின் புனரமைப்பு வேலைகளை முன்னின்று நடாத்தி தன் அளப்பெரிய பணிகளை ஆற்றிய UDO அமைப்பினருக்கு எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் UDO வில் அங்கம் வகித்து முன்னின்று பணியாற்றிய அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.