பிறப்பு :20.11.1949
இறப்பு :10.03.2025
யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி (K.K. Nagar), பிரான்ஸ் (Paris – Colombes) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அக்னேஸ் சொர்ணமலர் குருசுமுத்து அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இறமேந்து திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இறமேந்து குருசுமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆஞ்சலோமினா, மேரி நிர்மலா, பெனடிக்ரா ஜெயமலர், காலஞ்சென்ற கத்தரின் மஞ்சுளா, சுமித்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்;
யஸ்ரின் விமலதாஸ், வின்சன் டீ போல், டோன் பொஸ்கோ ஞானசெல்வம், பிலிப்றாஜ்குமார்(கென்றி) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற அடைக்கலசாமி, அருளாந்தம்(ராசமணி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நேசம் பிலோமினா, பெர்னதெத்தம்மா ஆகியோரின் அருமை மைத்துனியும்,
ஜொய்சி – றோய், ஜோய் -ராகினி, யூட் நிக்ஸன் கத்யா, பென்சியா- அலன், ஜென்சிக்கா, பௌலீனா, நிரோஜ், நிர்வின், அமலியா, மரியா, பெர்ணீசியா, ஆரோன், ஐடன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நிலா, அமுதன், கியாறா, அலிசியா, நித்திலன், ஆதித்யா ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்