கண்ணீர் அஞ்சலி.
நீராடும் நிலைபோல நின்றாடி வாழ்ந்ததென்ன
நிலையான வாழ்வங்கே நின்றதாய்க் கண்டதென்ன
நீங்காத நினைவுகள் நிறைவாகிப் போனதென்ன
நிரந்தரமாய் நீயும் கண்மூடிப் போனதென்ன!
ஊரோடும் உறவோடும் ஒன்றாகி நின்றதென்ன
உள்ளேயே அதுநின்று மென்றுதான் தின்றதென்ன
ஊர்கூடித் தேரிழுத்த ஒருகரம் குறையுதிங்கே
உறவுகள் ஏங்குதையோ நொந்து வெம்புதையோ!
போரென்ற தீகொண்டு போராடித் தீர்ந்ததென்ன
பெருங்கனவைச் சுமந்துகொண்டு நடமாடி ஓய்ந்ததென்ன
ஈடாடிப்போனதோவுன் மெய் காலக் கதவுடைந்து
உறவுகள் கலங்க நீயும் கண்மூடிப் போனதென்ன!
வாழ்வான சீரொன்று வேரோடு வீழ்ந்ததென்ன
வாவென்ற ஊருக்குமுன் விரைந்துநீ போனதென்ன
வீடு அடையவென்று வெகுவாய்ப் பயணப்பட – பெரும்
வீட்டைத் தேடி நீயும் கடுகதியில் போனதென்ன?
————-
அருளப்பண்ணை குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்ளுகிறோம்.
வின்சன் குடும்பத்தினர்.