இன்றைய 16.09.2018 இல் நடைபெற்ற ஊறணி புனித அந்தோனியார் ஆலயப் பங்கின் பொதுக் கூட்டமானது மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக அமைந்திருந்தது.
ஐந்து வேலைத்திட்டத்தை முன்னிறுத்தி இக்கூட்டம் மிகவும் சிறப்பான முடிவுகளை எட்டியிருக்கின்றது.
01. கட்டி முடிக்கும் தறுவாயில் இருக்கின்ற அறை வீட்டின் திறப்பு விழா பற்றியதாய் அமைந்திருந்தது. கட்டுமானத்திற்கு உதவிய இராணுவத்தினரின் கெளரவிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தலின் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
02. இதுவரையில் ( 31.08.2018) ஆலயச் சுற்று மதில் மற்றும் ஆலயப் பணி சார்ந்த கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு எந்த வித இடையூறுமின்றி அது சரியென முன்மொழிந்து வழிமொழியப்பட்டது.
03. ஆலயத்திற்கென வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்படுவதோடு மட்டுமல்லாது ஆலய அமைப்புச் சார்ந்த முறையான யாப்பு உருவாக்கி தாயகம் மற்றும் வெளிநாட்டு வாழ் ஊறணி உறவுகளின் பங்கு பற்றுதலோடு (உறுப்புரிமையோடு) ஓர் அமைப்பை உருவாக்குதல்.
04. எமது சேமக்காலையின் எல்லை தொடர்பாக முரண்படுநரை – அவர் இணக்க சபைக்கு போகும் பட்சத்தில் அதை சரியான முறையில் எதிர்கொள்ளுதல்.
05. அழிக்கப்பட்ட எமது ஆலயம் மற்றும் அறைவீடு தொடர்பான பொலீஸ் அறிக்கை பெறுதலும் நஸ்ட ஈட்டைப் பெற விரைந்து நடவடிக்கை எடுத்தலும் –
இவ் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக பொறுப்பானவர்கள் நியப்பிக்கப்பட்டார்கள்.
இன்றைய கூட்ட அறிக்கை பின்வருமாறு.