நினைவுகளே கனவுகளாய்
நிழல்களே உருவங்களாய்
உறவுகளே மறைவுகளாய்
ஊரது தூரத்துப் புள்ளியாய்
மறைவது எப்படி
சாரத்துக் கட்டுடன்
சட்டை கையினில்
ஈரத்தை உறிஞ்சிடும்
ஏக்கத்து வெய்யினில்-மர
ஓரத்து நிழலினில் சிறுகூட்டம்
பலதும் பத்தும் உதிரும்
கையில் பணமில்லை
வீட்டில்
பையில் பணமில்லை
இருந்தும்
களிப்பில் குறைவில்லை
தையது பிறந்து விட்டால்
தளம் திரும்ப மனம்விரும்பும்
பையவே வெய்யில் வரும்
பட்டென்று சுட்n;டரிக்கும்
உணவுக் கரையல்கள்
நாவெறுக்கும்
வளையல்கை உணவு கேட்கும்
படகுகள் முட்டிநிற்கும்
பாறைகள் பெருத்துவரும்
ஊரினில் சேதிவரும்
உழைப்பங்கு நடப்பதென்று
மாசி வந்தது
மயிலிட்டி சென்று
மாதாவை வேண்டுவர்
கடலோரத்தாயே
காணிக்கை மாதாவே
ஊர் திரும்பிட
உழைப்பு நடந்திட
வாழ்வு மலர்ந்திட
வழிகாட்டு தாயே
காணிக்கை செலுத்தியே
கருணையாய் வேண்டுவர்
கோவில் முடிந்து
கரையோர் கூடுவர்
கதைகள் பேசுவர்
கம்பத்து வெளிச்சம்
மறைய வாளையாம்
காபர் வெளிச்சம்
மறைய சூடையாம்
தீவில் இருப்போர்
திகில் உறுவர்
ஊரும் திரும்ப
முடிவெடுப்பர்
தீவிலும்
உழைப்பங்கு நடக்கும்
தீவுக்கூட்டம் போல்
சூடை சிலரை
செவ்வலாய் தாக்கும்
கருங்கண்ணி கணவாய்
தூண்டிலில் மாட்டும்
கடலோரின் வாழ்வில்
கலகலப்©ட்டும்
சில வேளை வலைகளும்
பாறையில் மாட்டும்
பலமான தொழில் சேதம்
மீனவரை வாட்டும்.
அருள்தாசு அந்திரேசப்பு.(27.06.2004)