அனபுறவுகளே,
ஊர் என்று, கோவில் என்று கூட்டுக் குடும்பமாய் கைகொடுத்து உழைத்து அபிவிருத்தி அடைந்த கிராமத்தின் பெயர்தான் ஊறணி.
பல்வேறு முயற்சிகள் மத்தியில் மீண்டும் கொடியேற்றம், மீண்டும் மீண்டும் விருந்து. இங்கு முழுமையான பங்களிப்பு. இங்கு நடப்பவை பற்றி பெருமைப்படும், நன்றி பாராட்டும் உள்ளங்களுக்காக படங்களைப் பதிவேற்றுகின்றோம்
அன்று கோவில் கட்டியபோது நம்மவர்களின் அர்ப்பணிப்பை ஞாபகப்படுய்துவதற்காக இந்த வீடியோ கிளிப்பை பதிவிடுகின்றோம். இந்த நவநாட்களில் தொடர்ந்து வெவ்வேறு பதிவேற்றம் செய்யவுள்ளோம்.
அது அன்று.
ஆனால் இன்று ஊறணியில்
வாழ்வோரின் எண்ணிக்கை சிறியவர் முதியோர் உட்பட 50 மட்டுமே.
70 வயதைத் தாண்டியவர்கள். 2 (Fr.ராஜன், தாயீஸ்)
60-70 வயதினர் 16
இளையோர்.16-25 வயதினர் 4
பள்ளிப் பிள்ளைகள். 6
குடிமனைகள் 20. கல் வீடு 5 (அறைவீடு உட்பட)
குடிசைகளில் தனித்து
வாழ்வோர் 6
குடும்பங்கள் 13
boat உள்ளோர் 5
இதுதான் இன்றைய ஊறணிக் கிராமம். அதிகமானவர்களுக்கு அவ்வப்போது வாழ்வாதார உதவிகள் கைகொடுக்கின்றன.
இவர்களில் சமுக ஈடுபாட்டுடன் செயல்படக்கூடியவர்கள் ஒரு சிலரே. எனவே, எட்ட, வெளியூர்களிலிருந்து நாளும் பொழுதும் வந்து ஊறணியின் அபிவிருத்திக்கு தங்களை அர்ப்பணிக்கும் நம் உறவுகளுக்கு உள்ளூர் புலம்பெயர் உறவுகள் எல்லோரும் என்றும் கடமைப்பட்டவர்ளே.
கோவில் திரும்பக் கட்டுவது
பற்றிய ஆலோசனையை முன் வைத்தது நாமல்ல. வலிவடக்கு பிரதேச சபை அதிகாரிகளே. ஏன் தொடக்காமல் இருக்கிறீர்கள்? அழிக்கப்பட்ட வணக்க தலங்களுக்கு நிதி கோரக்கூடிய நல்ல வாய்ப்பு இப்போ இருப்பதனால் அதை நழுவவிடவேண்டாம் என்பது.
தொடக்கினால் கட்டம் கட்டமாக பக்தர்களின் ஆதரவுடனும் தொடரலாம் என்ற ஆலோசனையோடு அடியெடுத்து
வைக்கின்றோம். இன்றைய நிலைமையில் ஊறணியின் இருப்பை, சிறப்பை எதிர்காலத்துக்கு உறுதிப்படுத்த நம் புனிதரின் பெயரில் நிரந்தர கோவில் தேவை என்பது உணரப்பட்டது. அதனால்
ஆவன செய்ய அயற்கென நியமிக்கப் பட்டவர்கள் தொடர்பு கொள்வார்கள்.
அன்புடனும் வாழ்த்துக்களுடனும்
Fr.ராஐன்