ஊறணியில் நிலங்கள் சரியாக இல்லை அல்லது அளக்கப்படவில்லை. அல்லது எனது நிலம் குறைந்துவிட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. அதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
1. கடல் அரிப்பு
2. பருத்தித்துறை வீதி நகர்த்தப்பட்டு உள்ளது. (சில இடங்களில்)
3. நிலத்தின் புவியியல் அமைப்புமாறியுள்ளது. மாற்றப்பட்டுள்ளது.
ஊறணியில் கோயிலடிக்கு மேற்காக பரு. வீதிக்கு வடக்காக இருக்கும் நில அமைப்பின் படத்தையே இங்கு தந்திருக்கிறேன்.
2010-2014 ஆண்டுகளில் ஊறணியில் சில வீடுகளைத் தவிர மற்றைய வீடுகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன.
அதைப்போலவே ஊறணியின் நில அமைப்பும் ஒரே மட்டமாக்கப்பட்டது.
மேடு பள்ளங்களாக இருந்த அமைப்பு மட்டமாக்கப்பட்டது. அதனால் வடக்குத் தெற்கான நீள அளவையில் ஊறணியின் நிலம் சுருங்கிவிட்டது.
கணிதம்- பௌதீகம் படித்தவர்கள் மேலிருக்கும் படத்திலிருந்து கருத்துச் சொல்லுங்கள்.
A – B என்ற புள்ளிகளிடையே உள்ள துாரம் சிவப்புக் கோட்டின் நேருக்கு உள்ளது குறைவாயிருப்பதைப் பார்ப்பீர்கள்.
அதே A -B என்ற புள்ளியிடையே நீலக் கோட்டின் துாரம் அதிகமானது.
நீலக்கோட்டு அமைப்புதான் முந்திய நிலம் இருந்த அமைப்பு.
ஊறணியிள் பழைய நல அமைப்பை அறியாக புதிய சர்வேயர்கள் வந்து அளக்கும்போது எதையும் கவனிக்காது நடுரோட்டில் இருந்து தொடங்கி அளந்துவிடுகிறார்கள். அதனால்தான் ஊர் பிரச்சினையில் கிடக்கிறது. பாழைய ஊரை – நிலத்தை அறிந்தவர்கள்,அறிந்த சர்வேயர்கள், குறுகிய நோக்கம் அற்றவர்களைக் கொண்டு நிலம் அளந்து தீர்க்கப்படவேண்டிய தேவை உள்ளது.
ஊரில் இருக்கும் பழையவர்களும் இந்த நில அமைப்புக்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் இல்லை.
“முக்காப் பரப்பு என்றுதானே இருக்கு. அதுஇவ்வளவு தானே” என்று கதை சொல்கிறார்கள்.
கோயில் வெட்டைக்கும் இதுதான் நடந்துள்ளது.
கோயில் கட்டிடத்தில் இருந்து கோயிலடி பரு. வீதிக்கு இடையே எவ்வளவு மேடு பள்ளம் என்று யோசித்துப் பாருங்கள்.
வெட்டை தரை மட்டாக்கப்பட்டு உள்ளது.
அதனால்தான் கோயில் வெட்டை குறுகிச் சின்னதாக உள்ளது.
இந்த நிலவியல் நிலையை அடியொற்றி ஊறணியின் காணிகள் பங்கீடும் அளவும் செய்யப்படவேண்டும்.
ஒரு ரோட்டுக்கரைக் காணியில், முந்தி வளவுக்குள் இருந்த மரம் இப்ப ரோட்டுக் கரை வேலி எல்லையாக மாறி இருக்கிறது. அவ்வளவுக்கு பரு. வீதியும் வடக்குப் பக்கமாகவும் தெற்குப் பக்கமாகவும் நகர்த்தப்பட்டு உள்ளது. (சில இடங்களில் வடக்கு சில இடங்களில் தெற்கு)
-வின்சன் போல் சந்தியாப்பிள்ளை