இளவாலையில் ஊறணி உறவுகளுக்கு வழங்கவிருக்கும் காணிகளைப் பெறவிருப்போருக்கான அடிப்படைத் தகமைகள்
(குறிப்பு: எமது மக்களை நெடுங்காலமாக அலைந்து திரிய விடாமல்இஅவர்களை ஒரு இடமாகக் குடியேற்றிஇஒரு புதுக் கிராமத்தை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்ச்சியின் முதல் கட்டம் தான் இது
சேர்த்த பணத்தில் வாங்கப்பட்ட காணியை சிலருக்கு பிரித்துக் கொடுக்கும் நடவடிக்கை. அந்தச் சிலரைத் தெரிவு செய்யும் பொழுது அவர்களிள் இயலாமைஇ வருமானமின்மைஇ இல்லாமை ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படும்)
1:
காங்கேசன்துறை ஊறணிக் கிராமத்தில் 1990ம் ஆண்டு ஆனி மாதம்வரை
வசித்தவர்கள்இ அல்லது திருமணத்தால் ஊறணிக் கிராமவாசியானவர்கள்
இக் காணியைப் பெறத் தகுதியானவர்கள். ஆனால் அவர்கள் ஊறணிப்
புனித அந்தோனியார் ஆலய பங்கு உரிமை உடையவராகவும்இ
இச்சமயப்பாரம்பாரியத்தை கடைப்பிடிப்பவராகவும்
இருத்தல் வேண்டும்.
2:.
தற்போது இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் இடங்களில் தமக்கு சொந்தமாக
காணிஇ வீடு போன்றவை இல்லாது இருத்தல் வேண்டும்.
3.:
திருமணமாகாத மகனோஇ மகளோ வெளிநாட்டில் இருந்தால்இ அவர்களுடைய
வதிவிட அனுமதிஇ வேலைஇ வருமானம் ஆகியவற்றை கவனத்திற்கொண்டு
அவர்கள் பெற்றோரின் விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்படும்.விண்ணப்பங்கள்
தகுதி அடிப்படையில் சமநிலையில் இருந்தால்இ குலுக்கல் சீட்டு
முறையில்தெரிவுசெய்யப்படுவர்.தெரிவு செய்யப்பட்டவர்கள்இ
கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவோம் என்று
சாட்சிகள் முன்னிலையில் எழுத்துமூல வாக்குத்தத்தம் அளிக்கவேண்டும்.
நிபந்தனைகள்:
1
காணியைப் பெறுபவர்இ அக்காணியில் நிரந்தரமாகத் வசிப்பதோடு
அக்காணியைத் தகுந்த முறையில் பராமரிக்கவும் வேண்டும்.
2
காணியைப் பெறுபவர்இ அக்காணியை விற்கவோஇ ஈடுவைக்கவோ
வாடகைக்கு விடவோஇ குத்தகைக்கு கொடுக்கவோ முடியாது என்பதோடு
எந்தவிதமான உரிமைமாற்றமும் செய்யக் கூடாது என்பதனையும்
ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
3.
காணியைப் பெறுபவர்இ அக்காணியை விட்டு நிரந்தரமாக
விலகுவதாகவிருந்தால்இ அதை நிர்வாகத்திடம் அறிவித்துஇ காணியை
நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
4.
காணியைப் பெறுபவர்இ மேற்படி நிபந்தனைகளை மீறும் படசத்தில்இ
அக்காணியை மீளப் பெறுவதற்கும்இ அவரைக் காணியை விட்டு
வெளியேற்றுவதற்கும் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்பதை
ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.(இத்தொகுப்பு பற்றிய
உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்
இதன் இறுதிமுடிவு ஆடிமாதம் 19 ம் திகதி இடம்பெறும்
ஊறணிமக்களின் ஒன்றுககூடலில் இறுதிமுடிவு எடுக்கப்படும்)
8.5.2008