தனது பொதுப்பணி மூலம் கியூடெக் நிறுவனத்தினூடாக ஊறணி அபிவிருத்திக்கென மேலும் குட்டியண்ணா அனுப்பிய பத்து லட்சம் ரூபாவில் 5 லட்சம் ரூபா பணத்தை நாம் கியூடெக்கிலிருந்து பெற்றிருக்கிறோம். இப்பணத்தில் பாடசாலைக்கான நீர் விநியோக நீர் தாங்கி, தாங்கி வைப்பதற்கான இரும்பாலான உயர ஸ்ரான்ட், இதற்கான புதிய நீர் இயந்திரம்,மற்றும் ஆலய சிரமதான வேலைகள், எமது பங்குத்தந்தையை மீள்குடியேற்றம் செய்வதற்கான ( விஜயராணியக்கா வீட்டின் மேல் மாடி அறையில்) நீர் தாங்கி அமைத்தல், இதற்கான புதிய நீர் இயந்திரம் வாங்கியமை போன்ற வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதோடு மிகுதிப்பணத்தில் கட்டடப் பொருட்கள் வைப்பதற்காக ஆலய வளவில் களஞ்சிய அறை ஒன்றும் தற்சமயம் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை மட்டுமல்லாமல் பாடசாலை பழைய மாணவர் நிதிக்காக வேறு மேலதிகமாக 50 ஆயிரம் ரூபா பணத்தையும் இச்சேவையாளன் அனுப்பி வைத்துள்ளார். இப்பணத்திலிருந்து எமது பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றிய 2 ஆசிரியர்களுக்கும் தலா 9 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு எஞ்சிய 32 ஆயிரம் ரூபா பழைய மாணவர் சங்கத்தின் தேவை கருதி வைப்பிலிடப்பட்டிருக்கின்றன. இத்தனைக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட பணம் வெளியிலிருந்து அவசரத்திற்காக கை மாற்றாக வாங்கியே ஈடு செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் குட்டி யண்ணாவின் இந்தப் பணம் மூலம் அப்பணக் கஸ்டம் தீர்க்கப்பட்டிருக்கின்றது. நாம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றோம்.ஊறணியில் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. குட்டி யண்ணா போன்ற சமூக சேவகர்கள் எமக்கு தோள் கொடுப்பதனால் உற்சாகமாக எம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடிகிறது. அவசர நிலைமைகளில் கை கொடுக்கும் குட்டியண்ணாவிற்கு எம் உளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அளப்பெரிய சேவையை ஆசீர்வதித்து மேலும் உடல், உள ஆன்ம பலத்தை தங்களுக்கு அளித்தருள வேண்டுமென்று எம் புனிதனாம் அந்தோனி முனியவன் ஊடாக இரந்து மன்றாடுகின்றோம்.