அன்புறவுகளே எமது ஊரில் பல இடங்களில் வீதி விளக்குகள் பல மாதங்களாக எரியாத நிலையில் உள்ளன. மாற்றித்தர வேண்டிய அரசு நிதி நெருக்கடியில் அதைச் செய்ய முடியாது உள்ளது.
இது இவ்வாறு இருக்க தன்னார்வமாக செயல்படக்கூடிய தையிட்டி இளையோர் ஒன்றிணைந்து பகல்வேளையில் தங்களது நாளாந்த வேலைகளை முடித்து விட்டு இரவு வேளையில் வீதிவிளக்குகளை மாற்றிக்கொடுக்கும் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கான நிதியை வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வரும் வெளிநாட்டு உறவுகள் மூலமும் அருகிலுள்ள குடும்பங்கள் மூலமும் பெற்று தங்கள் உடல் உழைப்பின் மூலமாக செய்கின்றார்கள்.
அந்த வகையில் எமது ஊரிலும்
- ஆலய அருட்பணிச்சபையின் நிதியில் சேமக்காலையின் முன்பாகவும்
- ரட்ணா- செல்வி; மதன்- சின்னா குடும்பத்தினரின் நிதியில் பிரதான வீதியில் மூன்று விளக்குகளும்
3.பங்குத்தந்தையின் தனிப்பட்ட நிதியில் பிரதான வீதியிலிருந்து ஆலயம் வரை மூன்று விளக்குகளும் - தையிட்டி இளையோரின் நிதியில் கரையோர உள் ஒழுங்கைகளில் இரண்டு இடங்களிலுமாக மொத்தம் ஒன்பது வீதி விளக்குகளை பொருத்தியுள்ளோம்.
ஆகவே இந்த வேலைகளை சரிவர மேற்கொள்ள உதவிய அனைத்து நல்லுள்ளங்களிற்கும் ஊர் மக்கள் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகள்.
இதனூடாக ஒரு வேண்டுகோள்.
எமது ஊரில் இன்னும் இரண்டு விளக்குகள் முழுமையாக எரியாமலும் இரண்டு விளக்குகள் ஒற்றை விளக்கு எரியாமலும் உள்ளன.
எனவே தான் இதற்காக மேற்கொண்டு உதவ விரும்புவோர் எம்மை தொடர்பு கொண்டு உதவி செய்யலாம் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
urany-viber