உரிய பெயர் வைத்ததும் நாமே
என்ற இறை வார்த்தைக்கு
இசைவுடன் உன்னை இணைத்து
ஆண்டு அறுபதை அடைந்திருக்கும்
அருட் சகோதரியே
ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு.
உன் பணியில் வெய்யில் வெக்கை
குளிர் பனி என் கால மாற்றத்துக்கு ஏற்ப
மலை நாடு வடக்கு கிழக்கு என
நீ சுற்றி வந்த இடங்களும் அதிகம் தான்
காலத் தேய்வில் வயசோ
நழுவிப் போக..
மூப்பு வந்து சேர்ந்து
முன் முடியும் நரைத்த போதும்
மலையிலும் மடுவிலும்
நடந்த உன் கால்களோ
தளர்ந்து போகவில்லை
உன் எண்ணங்களும்
செயல்களும் தொக்கி விடவில்லை
ஆன்மிகம் சமூகம்
இரெண்டெனக் கலந்து
பணியும் தொண்டும்
பவ்வியத்துடன் பரமனுக்குச்
செலுத்தும் தட்சணை என
உள்ளத்து வலிமையுடன்
உன் நோக்கத்தில் வெற்றி கண்டு
நலம் என்றும் நிறைய
நல்லாயனாம் கிறிஸ்துவின்
வார்த்தை உன்னை வழிநடத்த
பரலோக தந்தையின்
ஆசியும் அருளும் நிறைந்திருக்க
வைர விழாக் காணும் உன்னை
மனமார வாழ்த்தி நிற்கின்றோம்
உன் ஊர் மக்களாம் ஊறணி மக்கள்
[tie_slideshow]
[tie_slide] Slide 1 | [/tie_slide]
[tie_slide] Slide 2 | [/tie_slide]
[tie_slide] Slide 3 | [/tie_slide]
[tie_slide] Slide 4 | [/tie_slide]
[tie_slide] Slide 5 | [/tie_slide]
[tie_slide] Slide 6 | [/tie_slide]
[tie_slide] Slide 7 | [/tie_slide]
[tie_slide] Slide 8 | [/tie_slide]
[tie_slide] Slide 9 | [/tie_slide]
[tie_slide] Slide 10 | [/tie_slide]
[tie_slide] Slide 11 | [/tie_slide]
[tie_slide] Slide 12 | [/tie_slide]
[/tie_slideshow]